Published : 22 Sep 2016 07:50 AM
Last Updated : 22 Sep 2016 07:50 AM

மதனை அக்.6-க்குள் கைது செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

வேந்தர் மூவீஸ் மதன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த மே இறுதியில் மாயமானார். மதனைக் கண்டு பிடித்து மீட்கக்கோரி அவருடைய தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக கூறி நூற் றுக்கும் மேற்பட்ட மாணவர்க ளின் பெற்றோர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக மதன் மீது தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் ஒரு வாரத்தில் மதனைக் கைது செய்து ஆஜர் படுத்த வேண்டும் என உத்தர விட்டிருந்தது. அந்தக் கெடு நேற் றோடு முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு நடந்தது.

அப்போது போலீஸார் தரப்பில் மீண்டும் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய முயன்றனர். அப் போது நீதிபதிகள், ‘மதனை ஒரு வாரத்தில் கைது செய்ய ஏற்கெனவே உத்தரவிட்டி ருந்தோம். அதைவிட்டுவிட்டு இப் போது அறிக்கை தாக்கல் செய்ய வருகிறீர்கள்?’ என்றனர்.

அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வி.எம்.ராஜேந்திரன் ஆஜராகி, மதனின் கூட்டாளிகள் தற்போது நேபாளம் மற்றும் காஷ்மீரில் இருப்பதால் அங்கு 2 தனிப்படைகள் சென்றுள்ளன என்று கூறினார்.

உடனே நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மதனைக் கைது செய்தாலே அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும். ஆகவே வரும் அக்டோபர் 6-ம் தேதிக்குள் மதனைக் கைது செய்து நேரில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லையெனில் சென்னை மாநகர போலீஸ் ஆணை யர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்’’ என்றனர். மதனின் தாயார் தரப்பு வழக்கறிஞர் இன்பண்ட் தினேஷ், ‘‘மதனை பச்சமுத்துதான் சட்ட விரோத காவலில் அடைத்து வைத் துள்ளார். அது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும்’’ என வாதிட் டார். அதையேற்ற நீதிபதிகள், இந்த வழக்கில் பச்சமுத்துவையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தர விட்டு அக். 6-க்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x