Published : 16 Mar 2017 08:00 AM
Last Updated : 16 Mar 2017 08:00 AM

இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்: தேர்தல் ஆணையரிடம் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கட்சியின் சட்டவிதிகளுக்கு முர ணாக அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப் பட்டுள்ளார் என்றும், அதனால் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் கோரியிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

டெல்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைந்துவிட்டதால், கட்சியின் பொதுச் செயலாளர் கட்சி அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் சட்டவிதி. இதற்கு மாறாக கட்சியின் பொதுக் குழுவால் நியமனம் செய்யப்பட்ட ஒருவர், தன்னைத்தானே பொதுச் செயலாளர் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு செயல்படுகிற நடைமுறை முற்றிலும் தவறானது. கட்சியின் சட்டவிதிகளுக்குப் புறம்பானது என்பதை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னோம்.

இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ளது. அதிமுக சட்டவிதி யின்படி அடிப்படை உறுப்பினர் களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் எவ்வாறு கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட முடியும்? அவ்வாறு செயல்பட முடியாது என்பதே எங்களுடைய முக்கிய வாதமாக இருந்தது. எனவே, சசிகலா முறைப்படி கட்சிப் பொதுச் செயலாளராக தேர்ந் தெடுக்கப்படாத சூழ்நிலையில் அவர் எந்தவித அதிகாரமும் படைத் தவர் அல்ல. புதிய பொறுப்பாளர் களை நியமனம் செய்யவும் அவருக்கு அதிகாரம் இல்லை. ஏற்கெனவே ஜெயலலிதாவால் நிய மிக்கப்பட்ட தலைமைக் கழக நிர் வாகிகளை நீக்குவதற்கும் அவருக்கு அதிகாரம் இல்லை.

ஒரு அசாதாரணமான சூழ்நிலை யில் கட்சியின் பொதுச் செயலாளர் இடம் காலியாக இருந்தால் அதற்கு அடுத்த நிலையில் இருக்கின்ற தலைமைக் கழக நிர்வாகிகள்தான் தேர்தல் பணிகளை, கட்சிப் பணி களை கவனிப்பார்கள் என்று கட்சி யின் சட்டவிதிகளில் கூறப்பட்டுள் ளது. ஆனால், தேர்தல் வருகின்ற நேரத்தில் தேர்தலுக்கு கட்சியின் சின்னத்தைக் கேட்கும் உரிமை பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. இப்போது சசிகலாவுக்கு அந்த அதிகாரம் இல்லை. அவருக்கு அடுத்த நிலையில் இருக் கின்ற கட்சியின் அவைத் தலைவர், பொருளாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. கட்சி சட்டவிதியின்படி தற்போது அவைத் தலைவர் மது சூதனனுக்கே அந்த அதிகாரம் இருப் பதால் அவரது கோரிக்கையை ஏற்று இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

கட்சியில் ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டால் 5 ஆண்டுகள் ஆன பிறகே அவரைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்ய முடியும். ஆனால், சசிகலா கட்சியில் சேர்க்கப்பட்டு இன்னும் 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை. தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

அதிமுகவை வழிநடத்துபவர்கள் யாராக இருந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் எந்த ஒரு குடும்பத்துக் குள்ளும் கொண்டு போய் திணிக்கக் கூடாது என்பதில் ஜெயலலிதா உறு தியாக இருந்தார். அதற்காகத்தான் நாங்கள் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறோம். டிடிவி. தினகரன் மீது அந்நிய செலாவணி மோசடி (பெரா) வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரது வேட்பு மனுவை ஏற்கக் கூடாது என்றும் கோரியுள்ளோம்.

கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூடி, ஆர்.கே.நகர் தொகுதி வேட் பாளரை விரைவில் அறிவிக்கும். கூட்டணி குறித்து பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து கட்சியின் உயர்மட்டக் குழு முடிவு செய்யும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x