Published : 09 Aug 2016 11:08 AM
Last Updated : 09 Aug 2016 11:08 AM

சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோ: காந்திகிராம பல்கலை. பேராசிரியர் தயாரிப்பு

சூரியசக்தியில் (சோலார்) இயங்கும் ஆட்டோவை காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் உருவாக்கி உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள கிராமிய பல்கலைக்கழக மரபுசாரா எரிசக் தி மையத்தில், ஆராய்ச்சி மேற் கொண்டு வருபவர் பேராசிரியர் எஸ்.தேவனேயன். இவர் தனது 4 ஆண்டு கால ஆராய்ச்சியில் சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோவை தயாரித்துள்ளார்.

3 பயணிகள், ஓட்டுநருடன் 4 பேர் பயணம் செய்யும் வகையில் இந்த ஆட்டோ வடிவமைக்கப்பட் டுள்ளது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஆட்டோவின் மேற்கூரையில் 100 வாட்ஸில் 2 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பகல் நேரத்தில் நேரடியாக சூரிய ஒளியை உள்வாங்கிக் கொண்டு ஆட்டோவை இயக்கலாம். இரவு நேரத்தில் பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி யைக் கொண்டு 25 கிலோ மீட்டர் வரை இயக்கலாம்.

இதுகுறித்து பேராசிரியர் எஸ்.தேவனேயன் கூறியதாவது: ‘‘வெளிநாடுகளுக்குச் சென்றபோது மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ போன்ற வாகனத்தை பார்த்தேன். நமது நாட்டில் ஆட்டோக்களின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. எனவே, நாமும் ஏன் இதேபோல சூரியசக்தியில் இயங்கும் வாகனம் தயாரிக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

வெளிநாடுகளில் இதுபோன்ற வாகனங்கள் 3 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், நான் மிகக் குறைந்த செலவில் ரூ.1.30 லட்சத்தில் சூரியசக்தி ஆட்டோவை தயாரித்துள்ளேன். முன்னாள் குடி யரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் எனது பழைய கண்டுபிடிப்புகள் பற்றி கூறியபோது, அவர் மூலப் பொருட்கள் அனைத்தும் இந்திய தயாரிப்புகளாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மாத வருவாய் ரூ.30 ஆயிரம்

அதைக் கருத்தில் கொண்டு சோலார் ஆட்டோ தயாரிக்க மோட்டார் முதற்கொண்டு, அனைத்து உபகரணங்களுக்கும் உள்ளூர் தயாரிப்புகளையே பயன்படுத்தினேன். இந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மிகவும் பலன் அளிக்கும். ஆட்டோ ஓட்டுபவர்கள் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்து ஆட்டோ வாங்குகின்றனர். ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டர் ஓட்டினால், செலவுபோக மாதம் ரூ.15 ஆயிரம் வருமானம் கிடைக் கும்.

சூரியசக்தியில் இயங்கும் ஆட்டோக்களைப் பயன்படுத்தி னால், அவர்களுக்கு எரிபொருள் செலவு மிச்சம். மேலும் அதிக ஆண்டுகள் உழைக்கும். பராமரிப்பு செலவும் குறைவு. இதன்மூலம் இவர்கள் மாதம் ரூ.30 ஆயிரம் வரை வருமானத்தை அதிகரிக்க முடியும்’’ என்றார்.

பல்கலைக்கழகத்தின் மரபுசாரா எரிசக்தி மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிருபாகரன் கூறியதாவது: இந்த வாகனத்தில் கியர் இல்லை. எடை குறைவான பொருட்களை கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x