Published : 06 Feb 2017 09:48 AM
Last Updated : 06 Feb 2017 09:48 AM

பல்கலைக்கழக மாணவர் கபடி போட்டி: ஹரியானா பல்கலைக்கழகம் சாம்பியன்- ஆவடி வேல்டெக் 2-ம் இடம் பிடித்தது

இந்திய பல்கலைக்கழக சங்கத் தின் சார்பில் ஆவடியில் கடந்த 1-ம் தேதி முதல், 4-ம் தேதி வரை பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையேயான ஆடவர் கபடி போட்டியில் ஹரியானா குருசேத்திரா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்தது. ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்துக்கு 2-ம் இடம் கிடைத்தது.

இந்திய பல்கலைக்கழக சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் 2017-18-ம் ஆண்டுக்கான கபடி போட்டிகள் கடந்த மாதம் தொடங்கின.

16 அணிகள்

இதில், முதல் கட்டமாக கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு, தெற்கு பிராந்தியங்களில், பிராந்திய அளவில் பல்கலைக்கழக மாணவர் களுக்கிடையேயான போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற தலா 4 அணிகள் என 16 அணிகள் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. அந்த அணிகள் பங்கேற்ற இறுதிப்போட்டி ஆவடியில் உள்ள வேல்டெக் பல்கலைக்கழகத்தின் விளை யாட்டரங்கில் கடந்த 1-ம் தேதி முதல், 4-ம் தேதி வரை நடந்தது.

சென்னை மாநகராட்சி கல்வித் துறை துணை ஆணையர் கோவிந்தராவ் இதனை தொடங்கி வைத்தார். 16 அணிகள் பங்கேற்ற லீக் போட்டிகளில் ஆவடி வேல் டெக் பல்கலைக்கழகம், காட்டாங் கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், ஹரியானாவைச் சேர்ந்த குருசேத்திரா பல் கலைக்கழகம் மற்றும் ரோத்தெக் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் நான்கு இடங்களைப் பிடித்து, அரை இறுதி போட்டிகளுக்கு தேர்வாயின.

தொடர்ந்து, நடந்த அரை இறுதி போட்டிகளில், வேல்டெக் பல்கலைக்கழகம் மற்றும் குரு சேத்திரா பல்கலைக்கழகங்கள் வென்று, இறுதிப் போட்டிக்கு தேர்வாயின.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டியில் குருசேத் திரா பல்கலைக்கழக அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்து, அகில இந்திய பல்கலைக்கழக ஆடவர் கபடி சாம்பியன் கோப்பையை வென்றது. 2-ம் இடத்தை வேல்டெக் பல்கலைக்கழகமும், 3-ம் இடத்தை ரோதெக் பல்கலைக் கழகமும் பிடித்தன.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் வேல்டெக் பல்கலைக் கழக நிறுவன தலைவர் ரங்க ராஜன், வேந்தர் சகுந்தலா ரங்கராஜன், துணைவேந்தர் பேராசிரியர் பீலா சத்ய நாராயணா, நிர்வாக இயக்குநர் மகாலட்சுமி, பல்கலைக் கழக சங்கத்தின் பார்வையாளரான சுனில்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆடவர் கபடி போட்டியில் 2-ம் இடம் பிடித்த ஆவடி வேல்டெக் பல்கலைக்கழக அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x