Published : 03 Sep 2016 03:52 PM
Last Updated : 03 Sep 2016 03:52 PM

பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

தமிழக பொறுப்பு ஆளுநர் சி.வித்யாசாகர் ராவுக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ''தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றுள்ள மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.வித்யாசாகர் ராவை மனதார வரவேற்கிறேன்.

கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநர் பதவியை வகித்தாலும், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராக இருந்த அனுபவம் தமிழக மக்களுக்கு பேருதவியாக இருக்கும். அவரது வழிகாட்டுதலில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் மற்றும் தூய்மையான நிர்வாகம் தமிழகத்துக்கு கிடைத்திட எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வாழ்த்துகிறேன்'' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x