Published : 19 Apr 2017 07:58 AM
Last Updated : 19 Apr 2017 07:58 AM

தினகரனை தவிர்த்துவிட்டு அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை: அதிமுகவுக்குள் மீண்டும் அசாதாரண சூழல்

தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக அதிமுகவுக்குள் எதுவும் நடக்காது என்கிறார்கள். ஆனால், தற்போது கட்சிக்குள் என்னதான் நடக்கிறது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள்.

ஜெயலலிதா இருந்தவரை கட்சிக்குள் அவர் எடுப்பதுதான் முடிவு. அது ஏற்புடையதாகவே இல்லாவிட்டாலும் யாரும் எதிர்க் கேள்வி கேட்டதில்லை; கேட்கவும் முடியாது. ஆனால், இப்போது அந்தக் கட்சியில் ஆளாளுக்கு கேள்வி கேட்கிறார்கள், பதில் சொல்கிறார்கள், ஆலோசனைக் கூட்டம் போடுகிறார்கள். ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் முழுமையாக தங்களது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர நினைத் தது சசிகலா குடும்பம். அந்த நேரத்தில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஓபிஎஸ் திடீரென போர்க்கொடி தூக்கினார். சசிகலா குடும்பத்தின் மீதிருந்த வெறுப்பு காரணமாக அதிமுக தொண்டர் களில் பெரும்பாலோர் ஓபிஎஸ் செயல்பாட்டை நியாயப்படுத் தினர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, கட்சிக்குள் டிடிவி தினகரனின் கை ஓங்க ஆரம்பித்தது. இவருக்கு போட்டியாக திவாகரனும் படை திரட்டினார்.

இந்தச் சூழலில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செலவுக்கான நிதியில் பெரும்பகுதியை திவாகரன் ஆதரவு அமைச்சர்கள் இருவரே திரட்டிக் கொடுத்தார்கள். ஆனால், அதை செலவழித்து கணக்கு எழுதும் பொறுப்பை தனது ஆதரவாளரான ஜூனியர் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒப்படைத்தார் தினகரன். இதில் அதிருப்தி வெடித்த நிலையில்தான், வருமான வரித்துறையின் பிடி யில் சிக்கிக்கொண்டார் விஜய பாஸ்கர். அவரை சிக்க வைத்த திலும் உள்குத்து உண்டு என்கிறார்கள்.

ஏற்கெனவே, விஜயபாஸ்கர் மீது கடுப்பில் இருந்த சீனியர் அமைச்சர்கள், வருமான வரித் துறை ரெய்டில் சிக்கிய அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தினகரனுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். இதை தினகரன் ஏற்கவில்லை. இப்படி, ஓபிஎஸ் - சசிகலா யுத்தம் தினகரன் - திவாகரன் யுத்தமாக மாறிப்போனதையும் இதனால் கட்சிக்கும் ஆட்சிக்கும் சூழ்ந்து வரும் ஆபத்தையும் புரிந்து கொண்ட எம்.நடராஜன், சசிகலா அண்ணன் மகன் மகாதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்து வதற்காக தஞ்சாவூர் சென்றபோது இருவரையும் அழைத்துப் பேசியுள்ளார்.

‘கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள் ளும் எப்படியாவது குழப்பத்தை உண்டாக்கி அதிமுகவை அழிக்கப் பார்க்கிறது பாஜக. நீங்களே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடாதீர்கள். ஆட்சியை காப்பாற்றுவதற்காக கட்சியை காவு கொடுத்துவிடாதீர்கள்’ என்று நடராஜன் சொன்னதும், ‘இனி கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் எங்களது தலையீடு இருக்காது’ என்று திவாகரன் உறுதி கொடுத்திருக்கிறார்.

அமைச்சர்களுடன் ஆலோசனை

இந்நிலையில், அமைச்சர்கள் சிலர் திங்கட்கிழமை இரவு சென் னையில் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தை முன்னின்று கூட்டியவர்கள் திவாகரன் ஆதரவு அமைச்சர்கள். கூட்டம் முடியப் போகும் நேரத்தில் விஜயபாஸ்கரும் அங்கு வந்து சேர்ந்தார். தேர்தல் ஆணையத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்வது தொடர்பாகவும் அதிமுக அணி களை ஒன்றிணைப்பது பற்றியும் பேசினோம் என்று அமைச்சர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், தினகரனுக்கு தெரி விக்காமல் கூட்டப்பட்ட இந்தக் கூட்டமும் இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்துகொண் டிருக்கும் நிகழ்வுகளும் அதிமுகவுக்குள் மீண்டும் அசா தாரண சூழல் உருவாகி இருப் பதையே உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x