Published : 21 Jul 2016 09:09 AM
Last Updated : 21 Jul 2016 09:09 AM

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு ரூ.408 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ரூ.408 கோடியில் கட்டப்பட்ட ஆய்வகம், வகுப்பறை, அலுவலக கட்டிடங்களை முதல்வர் ஜெயல லிதா திறந்துவைத்தார். ரூ.35.72 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி கோ.அபிஷேகபுரத்தில் 15,376 சதுர அடியில் ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள் தங்க வச தியாக ரூ.3 கோடியில் கட்டப்பட்ட ஆசிரியர் இல்லத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கன்னியா குமரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, அரியலூர், ஈரோடு, சேலம், பெரம் பலூர், திருப்பூர், தருமபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மாணவியர் விடுதிகள், கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.

நபார்டு கடன் திட்டத்தின் கீழ் 31 மாவட்டங்களில் 234 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.269.18 கோடியில் 1,716 கூடுதல் வகுப்பறைகள், 196 ஆய்வுக் கூடங்கள் கட்டப் பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ், 526 அரசு தொடக்க, நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், தொடக் கப்பள்ளி, நடுநிலப்பள்ளி கட்டி டங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதுதவிர, நூலக கட்டிடங்கள், தொடக்கக்கல்வி அலுவலர் அலு வலகங்கள் என மொத்தம் ரூ.408 கோடியே 34 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டி டங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை, கோவை, நாகை, கடலூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 22 பள்ளிக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி சார் கற்றல் அனுப வங்களை அளிக்கும் வகையில் ரூ.80 லட்சம் செலவில் கைபேசி, கணினி வாயிலாக கற்பிக்கும் திட்டத்துக்காக, 58 இடங்களில் கல்வி செயற்கைக்கோள் வசதியை தொடங்கி வைத்தார்.

ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை யிலான தமிழ்ப்பாட புத்தகத்தில் உள்ள பாடல்களை கற்பிக்கும் விதமாக ஒளி, ஒலி பாடல்களாக தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டையும் 5 மாணவ, மாணவியருக்கு முதல் வர் வழங்கினார்.

இந்நிகழ்சியில் அமைச்சர் பா. பெஞ்சமின், தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ், அரசு ஆலே ா சகர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x