Published : 03 Feb 2017 09:54 AM
Last Updated : 03 Feb 2017 09:54 AM

புதிய வாக்காளர்கள் கைபேசி எண்ணை அளித்தால் இலவச அடையாள அட்டை: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

புதிய வாக்காளர்கள் ‘1950’ என்ற இலவச அழைப்பில், கைபேசி எண்ணை தெரிவித்தால், அவர் களுக்கு இ-சேவை மையத்தில் இலவசமாக வாக்காளர் அடை யாள அட்டை பெறுவதற்கான ரகசிய குறியீடு அனுப்பப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. இதில் 15 லட்சத் துக்கும் மேல் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர். இறந்தவர் கள், முகவரி மாறியவர்கள், இரட்டை பதிவுகள் என 3 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி, புதிய வாக் காளர்களுக்கு வாக்காளர் அடை யாள அட்டைகள் வழங்கப்பட்டன.

புதிய வாக்காளர்களுக்கு இம் முறை, புதிய நடைமுறையை தமிழக தேர்தல் துறை கொண்டு வந்தது. அதன்படி, வாக்காளர் களில் கைபேசி எண்ணை அளித்த வர்களுக்கு, ரகசிய குறியீடு அனுப் பப்படும் என்றும், அதைக் காட்டி, அரசு இ-சேவை மையங்களில் இலவசமாக வாக்காளர் அட் டையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது. மற்றவர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுகளுக்கே வந்து வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்குவார்கள் என்றும் கூறியது. இதன்படி, தற்போது வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறிய தாவது:

தமிழகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 15 லட்சத்து 26 ஆயிரத்து 985 புதிய வாக்காளர்கள் சேர்க்கப் பட்டனர். இவர்களில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 974 பேர் கைபேசி எண் களை பதிவு செய்துள்ளனர். அவர் களுக்கு ரகசிய குறியீடு குறுஞ் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. அதைக் காட்டி இலவசமாக அடை யாள அட்டை பெற்றுக்கொள்ள லாம். இதே முறையில் பெற விரும் பும் புதிய வாக்காளர்கள், ‘1950’ எனும் கட்டணமில்லா எண்ணில் கைபேசி எண்ணை தெரிவித்தால், அவர்களுக்கும் ரகசிய குறியீடு அனுப்பப்படும். அவர்கள் இலவச மாக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இலவச அட்டைக்கான தொகையை தேர்தல் துறை, இ-சேவை மையத்துக்கு செலுத்திவிடும். இதற்கான தனி மென்பொருள் அளிக்கப்பட்டுள்ளது. கைபேசி எண்ணை அளிக்காதவர்கள், உடனடியாக அடையாள அட்டை தேவைப்பட்டால் இ-சேவை மையத்தில் ரூ.25 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மற்றவர் களுக்கு தற்போது வாக்காளர் அடையாள அட்டை பதிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பிப்ரவரி 15-ம் தேதி, வீடு வீடாக சென்று வாக்காளர் அடையாள அட்டைகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x