Last Updated : 23 Jun, 2016 01:53 PM

 

Published : 23 Jun 2016 01:53 PM
Last Updated : 23 Jun 2016 01:53 PM

சரத்குமார் நலமே; வதந்திகளை நம்பாதீர்: ராதிகா விளக்கம்

சரத்குமார் உடல்நலம் குறித்து வெளியான வதந்திகளுக்கு ராதிகா சரத்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.

பிரபல நடிகரும் சமவத்துவ மக்கள் கட்சியின் நிறுவனருமான சரத்குமார் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் திரையுலகினர் பலரும் அவர் பூரண நலம்பெற்று திரும்ப வேண்டும் என்று தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள்.

இந்நிலையில் சரத்குமாருக்கு மாரடைப்பு என்ற செய்தியை ராதிகா சரத்குமார் மறுத்திருக்கிறார். மேலும், "வதந்திகளை நம்பாதீர். சரத் நலமாக இருக்கிறார். உணவு ஒவ்வாமை மற்றும் தசை பிடிப்பால் சிறு உபாதை ஏற்பட்டுள்ளது. அவ்வளவே" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x