Published : 31 Aug 2016 09:15 AM
Last Updated : 31 Aug 2016 09:15 AM

உள்ளாட்சித் தலைவர் தேர்தல் தொடர்பான சட்டத் திருத்தத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட். வலியுறுத்தல்

உள்ளாட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் தற்போதுள்ள நடை முறையே தொடரவேண்டும். இதுதொடர்பான சட்டத் திருத் தத்தை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி யுள்ளன.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எதிர்கட்சிகளை பாதிக்கும்

நகராட்சி, பேரூராட்சி தலைவர் களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் தற்போதைய முறைக்குப் பதிலாக, உள்ளாட்சி அமைப்புகளின் மன்ற உறுப்பி னர்கள் மூலம் தேர்வு செய்ய வகைசெய்யும் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தமிழக அரசு தற்போது அறிமுகப் படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் முறையை ரத்து செய்வது ஜனநாயக நெறிமுறை களுக்கு எதிரானது. இத்தகைய நடவடிக்கைகள் எதிர்க்கட்சியினர் இப்பதவிகளில் பெரும்பான்மை யாக வெற்றிபெறும் வாய்ப்பை தடுக்கும் நோக்கம் கொண்டவை.

எனவே, இந்த சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்பு களின் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் தற்போதைய முறையே தொடர அனுமதிக்க வேண்டும். அதிமுக அரசின் இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை தடுத்து நிறுத்த ஒன்றுபட்டு செயலாற்ற முன்வருமாறு அனைத்து ஜனநாயக சக்திகளுக் கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.

ஜனநாயகத்தை அழிப்பதா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

மேயர்களை மக்கள் தேர்ந் தெடுப்பதற்குப் பதிலாக மாமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்ய லாம் என்ற சட்டத் திருத்தம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வரப்பட்டது. இந்த சூழலில், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சி தலை வர்களை மக்களே தேர்ந் தெடுக்கும் உரிமைகளையும் தமிழக அரசு பறித்துள்ளது.

இதன்மூலம் வேட்பாளர்களின் தகுதி, திறமை, போன்றவற்றை வாக்காளர்கள் தங்களது சொந்த அனுபவத்தில் மதிப்பிட்டு அவர்களைத் தேர்வு செய்வதற் கான வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது. தலைவர்களை மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முறையில் ஊழல் முறைகேடுகள், ஆள்கடத்தல், கலகங்கள் போன்ற அசாதாரண விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை அரசு கருத்தில் கொள்ள வில்லை.

தனது சொந்தக் கட்சியின் அரசியல் ஆதாயத்துக்காக உள் ளாட்சி அமைப்புகளின் ஜனநாயக நடைமுறைகளை அழித் தொழிக்கும் நடவடிக்கைகளை அதிமுக அரசு கைவிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் எல்லா நிலைகளிலும் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் ஜனநாயக முறை பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x