Published : 18 Jun 2017 11:07 AM
Last Updated : 18 Jun 2017 11:07 AM

‘தி இந்து’ குழுமம் நிக்கலோடியன் சார்பில் நடந்த வேடிக்கை விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

‘தி இந்து’ குழுமம் மற்றும் நிக்கலோடியன் நிறுவனம் சார்பில் நடந்த வேடிக்கை விளையாட்டுப் போட்டிகளில் ‘தி இந்து’ குழும ஊழியர்களின் குழந்தைகள் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர்.

‘நிக்’ உட்பட குழந்தைகளுக்கான பல்வேறு சேனல்களை நிக்கலோடி யன் நிறுவனம் நடத்தி வருகிறது. ‘நிக்’ தொலைக்காட்சியில் வாரந் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ‘கட்டு பட்டு’ என்ற துப்பறியும் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அது நாடு முழுவதும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதை மேலும் பிரபலப்படுத்தும் விதமாகவும், குழந்தைகள் மத்தி யில் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் விதமாகவும் குழந்தைகளுக்கான வேடிக்கை விளையாட்டுகளை நிக்கலோடியன் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென் னையில் ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து, அக்குழும ஊழியர் களின் குழந்தைகள் பங்கேற்ற வேடிக்கை விளையாட்டுப் போட்டிகள், ‘தி இந்து’ தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

அதில் ‘தி இந்து’ குழும மனித வளத் துறை அதிகாரி கிருஷ்ணா பார்த்தசாரதி, சென்னை மண்டல விற்பனை மேலாளர் டி.ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று, போட்டிகளை நெறிப்படுத்தினர்.

இந்த வேடிக்கை விளையாட்டுப் போட்டியில், பல்வேறு துண்டுகளை இணைத்து இந்திய வரைபடம் உருவாக்குவது, எண்களை இணைத்து ஓவியம் வரைவது, பல்வேறு எழுத்துகள் மத்தியில் மறைந்திருக்கும் ஆங்கில வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது, ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல சிக்கலான பாதைகளின் நடுவே, சரியான வழியைக் கண்டுபிடிப்பது என பல்வேறு சுவாரசியமான போட்டி கள் நடத்தப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, ‘தி இந்து’ குழுமத்தின் இணை துணைத் தலை வர் வி.ஜெயராமன் பரிசுகளை வழங்கினார். டிரையோ பேக் நிறுவ னம் சார்பில், அனைத்து குழந்தை களுக்கும் ‘பென்சில் பவுச்’, உணவு எடுத்துச் செல்லும் பை ஆகியவை வழங்கப்பட்டன.

விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற அனைத்து குழந்தை களுக்கும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. இப்போட்டி குறித்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.ஸ்ருதி கூறும்போது, ‘‘இதுபோன்ற போட்டிகளில் நான் இதுவரை பங்கேற்றது இல்லை. இங்கு கொடுக்கப்பட்ட விளையாட்டுகள் அனைத்தும் மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாக இருந்தன. இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதுடன், புதிய அனுபவத்தையும் கொடுத் துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x