Published : 11 Sep 2016 09:56 AM
Last Updated : 11 Sep 2016 09:56 AM

சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க 15 நாட்களில் நிபுணர் குழு அமைக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு இனிவரும் காலங்களில் ஏற்படாமல் தடுக்க 15 நாட் களுக்குள் மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தகுதியான நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பால் ஏராளமானோர் தங்க ளது உடைமைகளை இழந்து தவித்தனர். இது போன்ற பாதிப்பு இனிவரும் காலங்களில் தொடராமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கக் கோரியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து நீதி விசாரணை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பலர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இதில் 2 மனுக்களை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை செய லர்கள் சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்துப் பார்த்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

அடையாறு, கூவம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிப்ப வர்களை சமரசம் செய்து, ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர் களே அங்கிருந்து வெளியேற ஒப்புக்கொண்டுவிட்டதால், கரை யோர ஆக்கிரமிப்புக்களை அகற்ற இதுதான் சரியான நேரமாக இருக்கும் என கருதுகிறோம்.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையில், முறையாக ஆக்கிரமிப்புக்களை அகற்றி யிருந்தால், இந்நேரம் கரையை பலப்படுத்துதல், தூர் வாருதல், வேலி அமைத்தல் போன்ற புணரமைப்பு பணிகளை மேற் கொண்டிருக்கலாம். ஆனால், தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆனபிறகும்கூட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. கரை யோரங்களில் வசிப்பது, ஆக்கிர மிப்பாளர்களுக்கும் ஆபத்தானது தான்.

இறுதி வடிவம்

அதேபோல, கடந்த 2010 முதல் 2016 வரை மாநில பேரி டர் மேலாண்மை திட்டத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இருப் பதாக தெரியவில்லை. எனவே, மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். மேலும், இத்திட்டத்தின் கீ்ழ் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு இனி வரும் காலங்களில் தொடராமல் தடுக்க 15 நாட்களுக்குள் தகுதி வாய்ந்த நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அரசு அமைக்க வேண்டும்.

நீர்நிலைகளை தூர் வாருவது, கரைகளைப் பலப்படுத்தி வேலி அமைப்பது அவசரமான பணி. அதுகுறித்தும் தமிழக அரசு ஒரு மாதத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர் பாக எந்தவொரு மனு தாக்கல் செய்யப்பட்டாலும், அதையும் தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்விலேயே பட்டியலிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x