Published : 01 Apr 2017 12:38 PM
Last Updated : 01 Apr 2017 12:38 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகள் மறுசீரமைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், நத்தம், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் ஆகிய தாலுகாக்களில் குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி, குடிமராமத்து திட்டம் மூலமாக மொத்தம் 44 பணிகள் ரூ. 1.29 கோடி மதிப்பீட்டில் சுமார் 125 கி.மீ நீள வாய்க்கால்களில் நடைபெற்று வருகிறது.

ஆத்தூர் நீர்த்தேக்க வரத்து வாய்க்கால் முதல் கருங்குளம் வரை மொத்தம் 6.98 கி.மீ. தூர வரத்து வாய்க்காலில் 3.5 கி.மீ. தூரத்துக்கு ரூ. 6.8 லட்சம் செலவில் மராமத்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் ஆகிய குளங்களுக்கு தங்கு தடையின்றி நீர் செல்லும்.

இதன் மூலம், இப்பகுதியில் உள்ள 685 ஏக்கர் குளத்து பாசன விவசாயிகள் பலன் பெறுவர். இப்பணிகள் ஆத்தூர் பட்டாதாரர்கள் சங்க பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆத்தூர் நீர்த்தேக்க பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர் நீதிபதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x