Published : 13 Aug 2016 08:38 AM
Last Updated : 13 Aug 2016 08:38 AM

ரூ.159 கோடியில் 80 பாலங்கள் கட்டப்படும்: சென்னை புறநகர் பகுதி சாலைகளை விரிவாக்கம் செய்ய ரூ. 744 கோடி ஒதுக்கீடு - நெரிசலை குறைக்க ஓசூரில் வெளிவட்ட சாலை

சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.744 கோடியில் சாலை கள் விரிவாக்கம் செய்யப்படும். ரூ.159 கோடியே 74 லட்சத்தில் 80 பாலங்கள் கட்டப்படும் என்று முதல் வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலைகள், சிறு துறை முகங்கள் சார்பில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.25 ஆயிரத்து 392 கோடியில் 48 ஆயி ரத்து 372 கி.மீ. சாலைகள் மேம் படுத்தப்பட்டதுடன், 2 ஆயிரத்து 95 பாலங்கள், சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.211 கோடியே 44 லட்சத்தில் 13 புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.11 ஆயிரத்து 367 கோடியிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவள்ளூர் 1, கடலூர் 2, வேலூர் 1, திருவண்ணாமலை 1, சேலம் 5, நாமக்கல் 3, தருமபுரி 3, கிருஷ்ணகிரி 3, ஈரோடு 4, திருப்பூர் 3, கோவை 3, நீலகிரி 1, திருச்சி 2, பெரம்பலூர் 2, அரியலூர் 2, புதுக்கோட்டை 8, தஞ்சாவூர் 5, நாகப்பட்டினம் 4, திருவாரூர் 2, மதுரை 3, திண்டுக்கல் 4, தூத்துக்குடி 8, திருநெல்வேலி 3, சிவகங்கை 4, விருதுநகர் 3 என 25 மாவட்டங்களில் 80 பாலங்கள் ரூ.159 கோடியே 74 லட்சத்தில் நபார்டு கடனுதவி பெற்று கட்டப்படும். இதன் மூலம் 472 கிராமங்களில் உள்ள 22 லட்சம் பேர் பயனடைவார்கள்.

நிலம் கையகப்படுத்த ரூ.215 கோடி

ஓசூர் நகரில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க ஜூஜூவாடி முதல் பேரண்டப்பள்ளி வரை 18.40 கி.மீ. நீள வெளிவட்டச் சாலை அமைக்கப்படும். இதற் காக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில் ஜூஜூவாடி, அனுமப்பள்ளி அக்ரஹாரம், பேகேப்பள்ளி, நல்லூர், எலுவப் பள்ளி, ஆவலப்பள்ளி, கெலவரப் பள்ளி, சின்னகொள்ளு, பெத்த கொள்ளு, மோரனப்பள்ளி, ஆலூர் ஆகிய 11 கிராமங்களில் ரூ.215 கோடியில் 60.16 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படும்.

சென்னை மாநகரில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலை கள், சென்னை துறைமுகப் பகுதிகளை இணைக்கும் பொருட்டு சென்னை பெரிய வட்டச் சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வரு கின்றன.

செங்கல்பட்டு - திருப்போரூர், தாம்பரம் - முடிச்சூர் - பெரும் புதூர், கோடம்பாக்கம் - பெரும்புதூர், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் - கீழச்சேரி, சட்ராஸ் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி, சிங்கப் பெருமாள் கோவில் - ஸ்ரீபெரும் புதூர் - திருவள்ளூர் - ரெட்ஹில்ஸ், திருமழிசை - ஊத்துக்கோட்டை ஆகிய சாலைகள் 4 வழிச் சாலைகளாக மாற்றப்படும்

பல்லாவரம் - துரைப்பாக்கம், சென்னை - சித்தூர் - பெங்களூரு ஆகிய சாலைகள் 6 வழிச் சாலைகளாகவும் விரிவாக்கம் செய்யப்படும். 141.60 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலைகள் ரூ.744 கோடியில் விரிவுப்படுத்தி மேம்படுத்தப்படும். இவை சென்னை வெளிவட்ட சுற்றுச் சாலை, பெரிய வட்டச் சாலை ஆகியவற்றுக்கு இணைப்புச் சாலையாக இருக்கும். இத னால் சென்னை புறநகரில் பெருமளவு போக்குவரத்து நெரி சல் குறையும்.

தாரமங்கலம், ராசிபுரம்

தாரமங்கலம் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஓமலூர் - சங்ககிரி - திருச்செங்கோடு - பரமத்தி வரை ரூ.20 கோடியில் புறவழிச் சாலை அமைக்கப்படும்.

ராசிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகை யில் அணைப்பாளையம் கிராமத்திலிருந்து மல்லியக்கரை - ராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு - பொன்குறிச்சி வரை ரூ.25 கோடியில் புறவழிச்சாலை அமைக்கப்படும். ராசிபுரத்தைச் சுற்றியுள்ள கல்வி நிலையங்களின் வாகனங்கள் இந்த புறவழிச்சாலை வழியாகச் செல்ல முடியும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x