Published : 30 Jun 2017 05:58 PM
Last Updated : 30 Jun 2017 05:58 PM

35 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

35 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்ற உத்தரவுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக ரவி நியமனம் - தமிழக அரசு டி.ஐ.ஜி-க்கள் 6 பேர், ஐ.ஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், தென்மண்டல ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல் ரயில்வே துறையின் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊர்க்காவல்படை ஐஜியாக இருந்த பெரியய்யா சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை எஸ்.பி. லோகநாதன், தஞ்சை சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்மண்டல ஐ.ஜியாக இருந்த முருகன், லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த வெங்கட்ராமன், உணவுப்பொருள் வழங்கல் துறை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முழு விவரம் வருமாறு:

1.சென்னை, நவினமயப்படுத்தல் துறை தலைமை ஆய்வாளர் கருணாசாகர் ஐபிஎஸ், ஏடிஜிபி-யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

2. சென்னை, ஐஜிபி, எஸ்டாப்ளிஷ்மெண்ட் ராஜீவ் குமார் ஐபிஎஸ், ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றதோடு நவீனமயமாக்கல் கூடுதல் டிஜிபியாகவும் செயல்படுவார்.

3. சென்னை, கடலோரப் பாதுகாப்பு குழு ஐஜிபி சந்தீப் ராய் ராத்தோர் ஐபிஎஸ், ஏடிஜிபியாகவும், ஈரோடு சிறப்புப் பணிப் படை ஏடிஜிபியாக ஏற்கெனவே காலியாக இருந்த பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

4. ஐஜிபி மற்றும் போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த அபய்குமார் சிங் ஐபிஎஸ்., தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், புகளூர், கருர் கூடுதல் டிஜிபி, தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

5. சென்னை, பயிற்சித்துறை தலைமை ஆய்வாளர் கே.வன்னியப் பெருமாள் ஐபிஎஸ், புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை பிரிவு மாநகர போக்குவரத்துக் கழக கூடுதல் டிஜிபி தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

6. மதுரை முன்னாள் டிஐஜி ஆனந்த் குமார் சோமானி ஐபிஎஸ், தலைமை ஆய்வாளராக (ஐஜிபி) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

7. சென்னை ஆயுதப் போலீஸ் படையின் உதவி தலைமை ஆய்வாளர் என்.ராஜசேகரன், ஐபிஎஸ் தலைமை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று, விஜிலன்ஸ் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறையில் பதவி வகிப்பார்.

8. சேலம் உதவி தலைமை ஆய்வாளர், பி.நாகராஜன், ஐபிஎஸ், தலைமை ஆய்வாளராக/ திருப்பூர் நகர போலீஸ் கமிஷனராக பதவி பெற்றுள்ளார்.

9. வடக்கு/கிரேட்டர் சென்னை இணை கமிஷனர், உதவி தலைமை ஆய்வாளர் என்.பாஸ்கரன் ஐபிஎஸ், சென்னை மாநகர குற்றவியல் பிரிவு தலைமை ஆய்வாளராக நியமிக்கப்படுகிறார்.

10. சென்னை ஊழல் தடுப்பு உதவி இயக்குநர், விஜிலன்ஸ் உதவித் தலைமை ஆய்வாளர் ஆர்.சமுத்திரப்பாண்டி, ஐபிஎஸ், சென்னை ஊர்க்காவல்படை தலைமை ஆய்வாளராக பதவி பெறுகிறார்.

11. வேலூர், உதவி தலைமை ஆய்வாளர் ஆர்.தமிழ் சந்திரன், ஐபிஎஸ், சிலைத்திருட்டுப் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம்

12. சென்னை, சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவு ஐஜி ஏ.ஜி. பொன்.மாணிக்கவேல், சென்னை, ரயில்வே ஐஜியாக நியமனம்.

13. திருப்பூர் ஐஜி சஞ்சய் மாத்தூர், சிபிசிஐடி, எஸ்ஐடி, ஐஜியாக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

14. சென்னை சிபிசிஐடி ஐஜி மகேஷ் குமார், ஐபிஎஸ், மதுரை மாநகர ஐஜி/போலீஸ் ஆணையராக நியமிக்கப்படுகிறார்

15. மதுரை மாநகர ஐஜி/போலீஸ் கமிஷனர் ஷைலேஷ் குமார் யாதவ், தெற்கு மண்டல ஐஜியாகிறார்.

16. தெற்கு மண்டல ஐஜி டாக்டர் எஸ்.முருகன், ஐபிஎஸ், ஊழல் தடுப்பு மற்றும் விஜிலன்ஸ் ஐஜி/இணை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

17. சென்னை ஊழல் தடுப்ப்பு மற்றும் விஜிலன்ஸ் ஐஜி/ இணை இயக்குநர், ஜி.வெங்கட்ராமன், சென்னை பொதுவிநியோகத்துறை ஐஜி.

18. திருச்சி ஆயுதப் போலீஸ் படை ஐஜி கே.பி.ஷண்முக ராஜேஸ்வரன், ஐபிஎஸ், சென்னை போலீஸ் பயிற்சித்துறை ஐஜியாக நியமனம்.

19. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், புகளூர், ஐஜி சி.சந்திரசேகர், ஆபரேஷன்ஸ் ஐஜியாக நியமனம்.

20. திருநெல்வேலி, மாநில போக்குவரத்து தலைமை கண்காணிப்பு அதிகாரி/ஐஜி, சு.அருணாச்சலம் ஐபிஎஸ், சென்னை, கடலோரப் பாதுகாப்பு ஐஜியாக நியமனம்.

21. சென்னை ஊர்க்காவல் படை ஐஜி கே.பெரியையா, சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம்

22. புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் டாக்டர் ஜே.லோகநாதன் ஐபிஎஸ், தஞ்சாவூர் சரக டிஐஜியாக நியமனம்.

23. போலீஸ் கண்காணிப்பு அதிகாரி அமித் குமார் ஐபிஎஸ், தஞ்சை சரக டிஐஜியாக நியமனம்.

24. தூத்துக்குடி மாவட்ட அஸ்வின் எம்.கோட்னிஸ், ஐபிஎஸ், டிஐஜியாக பதவி உயர்வு பெறுகிறார்.

25. மைலாப்பூர், உதவி போலீஸ் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், விழுப்புரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு பெறுகிறார்..

26. அம்பத்தூர், கிரேட்டர் சென்னை உதவி போலீஸ் ஆணையர், ஆர்.சுதாகர், வடக்கு, கிரேட்டர் சென்னை டிஐஜி/ இணை கமிஷனராக நியமனம்.

27. திருநெல்வேலி நகர உதவி கமிஷனர் பிரதீப் குமார், ஐபிஎஸ், மதுரை சரக டிஐஜியாகிறார்.

28, தஞ்சாவூர் சரக டிஐஜி டி.செந்தில் குமார், சேலம் டிஐஜியாக பொறுப்பேற்கிறார்.

29. தேன்மொழி ஐபிஎஸ், டிஐஜி, காஞ்சீபுரம் சரக டிஐஜியாக நியமனம்.

30. காஞ்சீபுரம் டிஐஜி நஜ்முல் ஹோடா, வடக்கு, கிரேட்டர் சென்னை போக்குவரத்து டிஐஜி/ இணை போலீஸ் ஆணையர்

31. வடக்கு, கிரேட்டர் சென்னை போக்குவரத்து டிஐஜி/ இணை போலீஸ் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தென் சென்னை டிஐஜி/ போக்குவரத்து உதவி ஆணையர்.

32. தென் சென்னை போக்குவரத்து காவல் உதவி ஆணையர், டிஐஜி, கே.பவானீஸ்வரி, திருச்சி சரக டிஐஜியாகிறார்.

33. சென்னை ரயில்வே போலீஸ் டிஐஜி வனிதா, ஐபிஎஸ், வேலூர் டிஐஜியாகிறார்.

34. ராமநாதபுரம் டிஐஜி கபில்குமார் சரத்கர், ஐபிஎஸ், திருநெல்வேலி சரக டிஐஜியாகிறார்.

35. விழுப்புரம் சரக டிஐஜி அனிசா ஹுசைன், சென்னை தலைமைச் செயலக டிஐஜி/ இணை போலீஸ் ஆணையராகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x