Published : 20 Jun 2016 12:02 PM
Last Updated : 20 Jun 2016 12:02 PM

திருப்பூரில் 8 டாஸ்மாக் கடைகள் மூடல்: 29 பேர் வேறு கடைகளுக்கு பணியிட மாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் 8 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதையடுத்து, ஊழியர்கள் 29 பேர் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி, கொங்கு பிரதான சாலை திருநீலகண்டபுரம் கடை எண் - 1924, பெருமாநல்லூர் சாலை சாந்தி திரையரங்கம் அருகில் கடை எண் - 1979, பின்னி காம்பவுண்ட் அருகில் கடை எண் - 1984, தாராபுரத்தில் கடை எண் - 3430, தாராபுரம் வட்டம் பெரமியம் கடை எண் - 3832, உடுமலையில் தாராபுரம் சாலையிலுள்ள கடை எண் - 2341, ஊத்துக்குளி வட்டம் செங்கப்பள்ளி தாளப்பதி கடை எண் - 3940, வெள்ளகோவில் - கோவை சாலையில் கடை எண் - 3637 ஆகிய 8 மதுபானக் கடைகள் நேற்று மூடப்பட்டன.

இதுதொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துவடிவேல் ‘தி இந்து’விடம் கூறும்போது, “மூடப்பட்ட கடைகளில் இருந்து மதுபான பாட்டில்கள் அனைத்தும், டாஸ்மாக் கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த 8 கடைகளில் பணிபுரிந்து வந்த 8 மேற்பார்வையாளர்கள், 12 விற்பனையாளர்கள், 9 உதவி விற்பனையாளர் என 29 பேர், மாவட்டத்தில் அதிகம் விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைகளுக்கு பணிமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x