Last Updated : 03 Mar, 2017 09:18 AM

 

Published : 03 Mar 2017 09:18 AM
Last Updated : 03 Mar 2017 09:18 AM

பூமியில் கனிம வாயு, கனிம இருப்பு கண்டறிய ஆய்வு அவசியம்: புவியியலாளர் எஸ்.எம்.சந்திரசேகர் கருத்து

பூமியில் கனிம வாயு, கனிம இருப்பு கண்டறியவதற்கான ஆய்வு அவசியமே என்று புவியியலாளர் எஸ்.எம்.சந்திரசேகர் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் செம்பியக்குடியைச் சேர்ந்த அவர், ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் பல்வேறு இடங் களில் ஹைட்ரோ கார்பன், பெட்ரோலியம் உள்ளதா என்ற ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் வாழ்விடங் கள், விவசாய நிலங்கள் நீங்கலாக பிற இடங்களில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என கூறுவது தவறான கருத்தாகும். இவ்வகையான எரிபொருள் பூமி யில் நீர்மட்டத்துக்கு கீழே அதிக ஆழத்திலேயே கிடைக்கிறது. இதற்கு சிறிய அளவிலான போர் வெல்களே அமைக்கப்படுகின்றன. பூமியில் உள்ள நீர்வழித்தடம் மாறிச் செல்லும் தன்மை கொண்டது. எனவே, விவசாயமோ நிலத்தடி நீர்மட்டமோ பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.

குறிப்பிட்ட இடத்தில் கனிமம் இருப்பு, எரிவாயு, டீசல், பெட்ரோல், ஹைட்ரோ கார்பன் இருக்கும் தகவல் உறுதி செய்யப்பட்ட ஆய் வுக்குப் பின் அதுகுறித்து, மக்க ளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதனையடுத்து, 20 ஆண்டு அவ காசத்தில் மனித இனம் வாழும் இடம் மாற்றி அமைக்கப்பட வேண் டும். பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி, இதன் பயன்பாடு காலம் எத்தனை ஆண்டுகள் என ஆய்வாளர்களால் அறிவிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை, மக்கள் வாழ்வு, சுகா தாரத்தை பாதுகாக்க உறுதி செய் யப்பட வேண்டும்.

தற்போது நமது எரிவாயு தேவையில் 20 சதவீதத்தை மட்டுமே நாம் உற்பத்தி செய்கிறோம். மீதமுள்ள 80 சதவீதத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம் என்பதையும் கவனத் தில்கொள்ள வேண்டும். இந்நிலை யில், எரிவாயு மற்றும் இயற்கை வாயு கண்டுபிடிப்பு வேண்டாம் என்பது சரியானதா என்பதை சிந்திக்க வேண்டும்.

இந்த நூற்றாண்டில் நிலத்தில் எந்த வகை கனிமம் மற்றும் வாயு இருக்கிறது என்ற மாதிரி எடுப்பதை அரசு தொடர வேண்டும். பொருளாதார மேம்பாடு இதனால் ஏற்படும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் பயன்பாடு அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகள் என வரையறை செய்ய வேண்டும். பூமியில் புதிய கண்டுபிடிப்பு, வாழும் மக்களுக் காக என்ற எண்ணம் அனைவ ருக்கும் வேண்டும். மக்களின் வாழ் வாதாரம் பாதிப்பு இல்லை என்ற உத்தரவாதத்தை அரசு கொடுக்க வேண்டும்.

தனியார் நிறுவனம் மட்டுமல் லாமல் பொதுமக்கள், ஆய்வாளர் கள் முன்னிலையில் ஆய்வுப் பணி நடக்க வேண்டும். இது பொதுமக்க ளின் கோபத்தைக் குறைக்கும். படித்த மாணவர்கள் இளைஞர் கள் சிந்திக்க வேண்டும். கண்டு பிடிப்பு நடக்கட்டும். உபயோகப் படுத்துவதற்கான காலம் தானே வரும். மனித இனம் மரபுசாரா மாற்று எரிசக்திக்கு மாறும் வரை இவ்வகையான எரிபொருட்களின் தேவை தவிர்க்க முடியாததே. எரிபொருட்கள் குறித்து ஆய்வு செய்வதாலோ அதனை எடுப்ப தாலோ மனித இனத்துக்கு பாதிப்பில்லை என்பது நிதர்சனமான உண்மை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x