Last Updated : 03 Jul, 2016 11:18 AM

 

Published : 03 Jul 2016 11:18 AM
Last Updated : 03 Jul 2016 11:18 AM

இளங்கோவன் ராஜினாமா செய்து ஒருவாரமாகியும் புதிய தலைவரை நியமிக்காததால் களையிழந்த காங்கிரஸ் தலைமை அலுவலகம்

ஓரிரு நாளில் நியமனம் என தகவல்

ஈவிகேஎஸ் இளங்கோவனின் ராஜினாமா ஏற்கப்பட்டு ஒரு வாரமாகியும், தமிழக காங்கிரஸ் கமிட் டிக்கு புதிய தலைவர் அறிவிக்கப் படவில்லை. இதனால், அறிக்கை வெளியிடக்கூட ஆளில்லாமல் தமிழக காங்கிரஸ் களையிழந்து போயிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் திமுக கூட்டணியில் 41 இடங் களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற் றது. இந்த தோல்விக்கு மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன்தான் காரணம் என எதிர் தரப்பினர் மேலிடத்தில் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 14-ம் தேதி டெல்லி சென்ற இளங்கோவன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து, தேர்தல் தோல்வி குறித்தும், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் விளக் கம் அளித்தார். அதை ஏற்காத ராகுல், இளங்கோவனின் செயல் பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தன்னால் இயலவில்லை என்று கூறி இளங்கோவன் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார். அவரது ராஜினாமா கடந்த 25-ம் தேதி ஏற்கப்பட்டது. ஆனால், ஒரு வாரமாகியும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

இளங்கோவன் ஆதரவாளர்கள் யாரும் வராததால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் சத்திய மூர்த்தி பவனும் கடந்த ஒரு வாரமாக வெறிச்சோடிக் காணப்படுகிறது. சுவாதி படுகொலை, வினுப்பிரியா தற்கொலை, பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை என அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் சார்பில் அறிக்கை வெளியிடக்கூட யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இளங்கோவன் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்ட போது, ‘‘இளங்கோவன் இருந்திருந் தால் சுவாதி படுகொலை உள் ளிட்ட சம்பவங்களில் அதிமுக அர சுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்தியிருப்பார். அர சுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுத்திருப்பார். தமிழகத்தில் தற்போது காங்கிரஸ் இருப்பதற் கான அறிகுறியே இல்லை’’ என்று விரக்தியுடன் கூறினார்.

டெல்லியில் நிர்வாகிகள் முகாம்

இதற்கிடையில், தமிழக காங் கிரஸ் கமிட்டி தலைவர் பதவி யைக் கைப்பற்ற சு.திருநாவுக் கரசர், டாக்டர் செல்லக்குமார், எச்.வசந்த குமார், பீட்டர் அல்போன்ஸ், மாணிக் தாகூர் என பல நிர்வாகிகளும் டெல்லியில் முகாமிட்டு மேலிடத் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

புதிய தலைவர் நியமனம் தொடர் பாக தேசிய பொதுச் செயலாளர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரிடம் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள ராகுல் காந்தி இன்று அல்லது நாளை நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. அவர் வந்ததும், இன்னும் ஓரிரு நாளில் தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் எம்.பி. மாணிக் தாகூரை மாநிலத் தலைவராக்க ராகுல் காந்தி விரும்புவதாகவும், அதற்கு மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரி விப்பதாகவும் தெரிகிறது. இதனால் தலைவர் நியமனம் தாமதம் ஆவதாகவும் நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x