Last Updated : 08 Aug, 2016 09:10 AM

 

Published : 08 Aug 2016 09:10 AM
Last Updated : 08 Aug 2016 09:10 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடிய ஜெயலலிதா வழக்கறிஞர்களுக்கு மேலும் முக்கிய பொறுப்புகள்: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி, உயர் நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் என கடந்த 20 ஆண்டுகளாக பயணிக்கிறது. இவ்வழக்கின் மேல்முறையீட்டு மீதான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் விரைவில் வெளியிட இருக்கிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் தனக்காக உழைத்த வழக்கறிஞர் களுக்கு முக்கிய பொறுப்புகளை ஜெயலலிதா அவ்வப்போது வழங்கி வருகிறார். பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் நவனீத கிருஷ்ணனுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், டிஎன்பிஎஸ்சி தலைவர், மாநிலங் களவை உறுப்பினர் என பதவிகள் வழங்கப்பட்டன.

இவரைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் பி.குமாருக்கு அரசு தலைமை வழக்கறிஞர் பதவி வழங்க ஜெயலலிதா முடிவெடுத் தார். ஆனால் தனது உடல்நிலை கடுமையான பணிகளுக்கு ஒத் துழைக்காது என்பதால் அப்பத வியை வேண்டாம் என பி.குமார் கூறிவிட்டார். மேலும் அவரது வேண்டுகோளின்படி அவரது உதவியாளரான ராஜரத்தினத்துக்கு மாநில குற்றவியல் அரசு வழக்கறிஞர் பதவி கடந்த வாரம் வழங்கப்பட்டது.

இதேபோல சசிகலாவுக்காக வாதாடிய வழக்கறிஞர் மணி சங்கர், தற்போது கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட் டுள்ளார். மேலும் ஜெயலலிதா தரப்பில் நீதிமன்றத்தில் வக் காலத்தில் கையெழுத்திட்ட வழக்கறிஞர்கள் தனஞ்செயன், வைரமூர்த்தி ஆகியோருக்கு சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல அன்புக்கரசு, கருப்பையா ஆகியோருக்கு கூடுதல் குற்றவியல் வழக் கறிஞர் பதவியும், குற்றவியல் அரசு வழக்கறிஞராக முத்துக் குமாருக்கும் கடந்த வாரம் பதவி வழங்கப்பட்டது.

காத்திருக்கும் வழக்கறிஞர்கள்

இந்நிலையில் ஜெயலலிதா வழக்கை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனித்து வந்த வழக் கறிஞர்கள் செந்தில், அசோகன் ஆகியோருக்கு இதுவரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை. சசிகலாவுக்கு நெருக்கமானவரான செந்தில், கர்நாடக உயர் நீதி மன்றத்தில் சாதாகமான தீர்ப்பை பெற்று தந்ததால் ஜெயலலிதா நிம்மதி அடைந்தார். இதன் காரண மாக செந்தில் தற்போது ஜெய லலிதாவின் சட்ட ஆலோசகராக மாறியுள்ளார். நிலுவையில் இருக்கும் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு செந்திலுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வெளியானால் இளவரசிக்காக ஆஜராகி வரும் அசோகனுக்கு தமிழக அளவில் பெரிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இவ்வழக்கில் பணி யாற்றிய வழக்கறிஞர்கள் செல்வக் குமார், திவாகர், பன்னீர் செல்வம் ஆகியோருக்கும் பதவி வழங்கப்பட லாம் என தெரிகிறது.

டிஎன்பிஎஸ்சி-யில் தற்போது காலியிடம் எதுவும் இல்லாததால் த‌மிழக தகவல் ஆணையத்தின் உறுப்பினர்கள் அல்லது அரசு வழக்கறிஞர் களாக நியமிக்கப்படலாம் என தெரி கிறது. இதற்கான அறிவிப்பு இன் னும் சில தினங்களில் வெளியாக லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகழேந்திக்கும் பதவி கிடைக்குமா?

வழக்கறிஞர்களைப் போல, கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி இவ்வழக்குக்காக நீண்ட காலமாக நீதிமன்ற படிகளை ஏறி இறங்கினார். வழக்கில் வாதாடிய வழக்கறிஞ‌ர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்ததோடு, பெங்களூரு சிறையில் ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு தேவையான உதவிகளையும் கர்நாடக மாநில அ.தி.மு.க-வினரின் ஒத்துழைப்போடு மேற்கொண்டு வந்தார்.

ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது புகழேந்தியும் அவரது மனைவி யும் முன்வந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு தயங்காமல் ஜாமீன் பொறுப்பை ஏற்றனர். அப்போது நீதிபதி குன்ஹா, “இவ்வளவு பெரிய தொகைக்கு தெரிந்துதான் ஜாமீன் கொடுக்கிறீர்களா? வழக்கு வேறுவிதமாக போனால் உங்கள் சொத்துக்களை இழக்க வேண்டிவரும், பரவாயில்லையா?” என்று கேட்டார். அதற்கு, “சொத்துக்களை பற்றி கவலையில்லை எங்கள் ஜாமீன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று புகழேந்தியின் மனைவி குணஜோதி கூறினார்.

“மக்களின் நல்ல தீர்ப்பை பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வந்து சாதனை செய்துள்ளார் எங்கள் தலைவி. இந்நிலையில், தனக்காக சட்டப் போராட்டம் நடத்தியவர்களுக்கு பதில் மரியாதை செய்யத் தொடங்கி உள்ளார். பல ஆண்டுகளாக உறு துணையாக செயல்பட்ட புகழேந்தி உள்ளிட்டநிர்வாகிகளுக்கும் அந்த வாய்ப்பைத் நிச்சயம் தருவார்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் கர்நாடக மாநில அ.தி.மு.க-வினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x