Published : 13 Aug 2016 08:28 AM
Last Updated : 13 Aug 2016 08:28 AM

நோயின் காரணத்தை ஆராய்வது சித்த மருத்துவம் மட்டுமே: மருத்துவர் கு.சிவராமன் கருத்து

நோய்களைத் தீர்ப்பதோடு அதன் காரண காரியங்களை ஆராய்வது சித்த மருத்துவம் மட்டுமே என்று சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறியுள்ளார்.

நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசியதாவது:

உலகில் பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளன. அவை பெரும்பாலும் அனுபவப் பதிவாகவே உள்ளன. சித்த மருத்துவ முறை மட்டுமே நோயின் காரண காரியங்களை ஆராய்கிறது. ‘அண்டத்திலிலுள்ளதே பிண்டத் திலுள்ளது’ எனக் கூறுவது சித்த மருத்துவமுறை.

இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நம் நாட்டின் இறப்பு வீதத்தில் 75 சதவீதத்துக்கும் மேலான வர்கள் சர்க்கரை, ரத்தஅழுத்தம், புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட வர்களாக இருப்பர் என்று மருத் துவ ஆராய்ச்சி கூறுகிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்கள் உடல்நலனில் அக்கறை கொண்டு, நமது முன்னோர்கள் கூறிய வாழ்க்கை முறையைப் பின்பற்றவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ந.சேஷாத் திரி, இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் அருள்தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x