Published : 05 Mar 2014 12:00 AM
Last Updated : 05 Mar 2014 12:00 AM

ராமதாஸ் மீதான வழக்கு ஏப்ரல் 5 -ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக முதல்வரையும், காவல் துறையையும் அவதூறாகப் பேசியதாக பாமக நிறுவனர் ராமதாஸ ்மீது தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தை அடுத்த திண்டி வனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி நடந்த பத்திகையாளர் சந்திப்பில் பேசியபோது,

“மரக்காணம் கலவரத்திற்கும் பாமகவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.பாமக தொண்டர் செல்வராஜ் இறப்பை சந்தேக மரணம் என மரக்காணம் காவல்

துறை வழக்குப் பதிவு செய்துள் ளது. விழுப்புரம் எஸ்பி மனோ கரன் மற்றும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. எனவே இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தவேண்டும்” என கூறியிருந்தார்.

இதையடுத்து, தமிழக அரசை யும், காவல்துறையையும் ராம தாஸ் அவதூறாகப் பேசியதாகக் கூறி அரசு வழக்கறிஞர் பொன்.சிவா விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கு செவ்வாய்க் கிழமை விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தி இவ்வழக்கை ஏப்ரல் 5 –ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x