Published : 30 Jun 2016 11:39 AM
Last Updated : 30 Jun 2016 11:39 AM

பூட்டிய வீடுகளில் திருடி வந்த நபர் கைது: 105 பவுன் பறிமுதல்

சென்னையில் கடந்த சில மாதங்களாக விருகம்பாக்கம், வடபழனி, அசோக்நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற்றதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின்படி வடபழனி சரக உதவி ஆணையர் எம்.அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் விசா ரணை நடத்தியதில் ஒரே நபர்தான் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை யடுத்து தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குற்றவாளி கருப்பசாமி என்கிற இசாமி (43) என்பவரை நேற்று கைது செய்தனர்.

பம்மலில் வசித்து வந்த இவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 105 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x