Published : 12 Apr 2014 11:52 AM
Last Updated : 12 Apr 2014 11:52 AM

பட்டா கோரி ஆட்சியர் அலுவலகத்தை காஞ்சிபுரம் விவசாயிகள் முற்றுகை

விவசாயம் செய்து வரும் நிலத்துக்கு பட்டா கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறப்படுவதாவது: காஞ்சிபுரம் அடுத்த சித்தேரி மேடு கிராமத்தில் உள்ள சுமார் 300 ஏக்கர் நிலங்களை நாங்கள் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வருகிறோம்.

அந்த நிலத்தை கடந்த 1912-ம் ஆண்டு ஏகபோக மிராசுதாரர் என்ற முறையில், கொல்லா வெங்கட கண்ணையா செட்டியாருக்கு ஆங்கிலேய அரசாங்கம் பட்டா வழங்கியது.

அப்போது நாங்கள் பயன்படுத்திய நிலத்துக்கு, கொல்லா வெங்கட கண்ணையா செட்டியாரிடம் குத்தகை செலுத்தி வந்தோம்.

1955-ம் ஆண்டுக்கு பிறகு, நில உச்சவரம்பு சட்டப்படி, கொல்லா வெங்கட கண் ணையா செட்டியார் தனது அதிகப்படியான நிலத்தை தர்ம ஸ்தாபனத்துக்கு மாற்றாமல் வைத்துள்ளார்.

நில உச்சரவரம்பு சட்டம் அமலானது முதல் அந்த இடங்களை நாங்கள் குத்தகை செலுத்தாமல் பயன்படுத்தி வருகிறோம். சுமார் 40 ஆண்டு களாக நாங்களே பயன்படுத்தி வரும் நிலையில், இதற்கான அடங்கல் கொல்லா வெங்கட கண்ணையா செட்டியார் பெயரி லேயே பதிவு செய்யப்படுகிறது.

எனவே நாங்கள் பயன்படுத்தி வரும் நிலத்துக்கு எங்கள் பெயரில் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டோம். கோரிக்கை நிறை வேறாவிட்டால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x