Published : 27 Jun 2016 08:48 AM
Last Updated : 27 Jun 2016 08:48 AM

இடைநிலை ஆசிரியர் பயிற்சி: இன்று தரவரிசைப் பட்டியல் - கலந்தாய்வு ஜூலை 4-ல் தொடங்குகிறது

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு ஜூலை 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர் பயிற்சி நிறுவனங் களில் மாணவர் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் நடை பெற உள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல், மாவட்டங் களில் ஆன்லைன் வழி கலந்தாய்வு நடத்தப்படும் மையங்கள் ஆகிய விவரங்கள் இணைய தளத்தில் (www.tnscert.org) 27-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படும்.

கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் திங்கள்கிழமை முதல் அனுப்பப்படும். மாணவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு அழைப்புக்கடிதத்தை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

ஜூலை 4 (திங்கள்கிழமை) - ஆங்கில வழியில் படிக்க விண்ணப்பித்துள்ள அனைத்துப் பாடப்பிரிவு மாணவிகள், தெலுங்கு மற்றும் உருது வழியில் படிக்க விண்ணப்பித்துள்ள அனைத்துப் பாடப்பிரிவு மாணவ-மாணவிகள், சிறப்புப் பிரிவினர். (மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள்)

கலந்தாய்வு தினமும் காலை 9 மணிக்கு தொடங்கும். கலந்தாய்வுக்கு வருவோர் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்று, சிறப்பு பிரிவினர் எனில் அதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கலந்தாய்வு

ஜூலை 4-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறும். பாடப்பிரிவு வாரியான கலந்தாய்வு நாள் விவரம் வருமாறு:-

ஜூலை 5 (செவ்வாய்க்கிழமை) - தொழிற்பிரிவு, கலைப்பிரிவு மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள்

ஜூலை 7 (வியாழக்கிழமை) - தொழிற்பிரிவு மாணவிகள்

ஜூலை 8 (வெள்ளிக்கிழமை) - கலைப்பிரிவு மாணவிகள்

ஜூலை 9 (சனிக்கிழமை) - அறிவியல் பிரிவு மாணவிகள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x