Last Updated : 04 Jun, 2017 08:44 AM

 

Published : 04 Jun 2017 08:44 AM
Last Updated : 04 Jun 2017 08:44 AM

நெய்வேலி மாணவர் சாதனை: தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற தொழிலாளியின் மகன்

நெய்வேலியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் தமிழில் படித்து, தமிழிலேயே ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குமேலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். நெய் வேலி என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைசெய்து வந்தார். இவரது மனைவி வள்ளி, வீட்டுவேலை மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (27). 8-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்தார். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நெய்வேலி என்எல்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பின்னர் கோவையில் பி.பார்ம் படித்துள் ளார். இதன் பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பார்ம் படித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி மருந்து ஆய்வாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாளராக நியமிக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு இந்தியன் ரயில்வே கணக்கு பணியில் சேர்ந்துள்ளார்.

இதற்கிடையில் 2011-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வுக்காக முதல்நிலை தேர்வு எழுதினார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. மேலும் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளிலும் தேர்வு எழுதி தோல்வி ஏற்பட் டுள்ளது. தமிழிலேயே தேர்வு எழுதி, தமிழிலேயே நேர்முகத் தேர்வை எதிர்கொண்டார். எந்தப் பயிற்சி மையத்திலும் சேராமல் வேலை பார்த்துக் கொண்டே படித்த இவர், 2016-ம் ஆண்டு ஐஏஎஸ் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து மெயின் தேர்வையும், நேர்முக தேர்வையும் தமிழிலேயே எதிர்கொண்டு 332-வது ரேங்கில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக மணிகண்டன் கூறுகையில், “332-வது ரேங்க் வரிசையில் தமிழில் தேர்வு எழுதி வெற்றிபெற்ற மாணவன் நான் தான் என்பது எனக்கு மகிழ்ச் சியை அளிக்கிறது. தமிழகத்தி லேயே எனக்கு பணியிடம் ஒதுக் கப்பட்டால் அதுவே பெரிய மகிழ்ச்சி. வருமானவரித்துறை அதிகாரி பாஸ் கரன் கிருஷ்ணமூர்த்தி எனக்கு அறிமுகமானார். அவர் கொடுத்த ஊக்கம் தேர்வில் வெற்றி பெற உதவியாக இருந்தது. ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி சாரங்கி, புதுச்சேரி வருமானவரித் துறை இயக்குநர் விவேகானந்தன் ஆகியோரும் எனக்கு உதவியாக இருந்தனர். எனது தமிழாசிரியர் முத்துசாமி கொடுத்த ஊக்கத்தால் தான் தமிழிலேயே தேர்வை எதிர் கொண்டேன். எனது தாயாரோடு கூலி வேலைக்கு சென்றுள்ளேன். கூரை வீட்டில்தான் வசித்து வந்தேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x