Published : 04 Nov 2014 11:02 AM
Last Updated : 04 Nov 2014 11:02 AM

முல்லை பெரியாறு அணை ஷட்டர்கள் பலமாக உள்ளன: மூவர் கண்காணிப்பு குழு

முல்லை பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழு நேற்று நடத்திய ஆய்வில், ஷட்டர் பலமிழந்துவிட்டதாக கேரள அரசு கூறியது பொய் புகார் என்பது உறுதி செய்யப்பட்டது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதி மன்றம் கடந்த மே 7-ம் தேதி உத்தர விட்டது. அணை பாதுகாப்பு, கண் காணிப்பை உறுதி செய்ய மூவர் குழு அமைக்கவும் உத்தரவிட்டது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் எல்.ஏ.வி.நாதன் தலைமையில் தமிழக, கேரள பிரதிதிகள் அடங்கிய 3 பேர் குழு அமைக்கப்பட்டது. இவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழுவும் அமைக்கப்பட்டது. இதுவரை 4 முறை மூவர் குழு கூடி ஆய்வு செய்துள்ளது.

இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்த நிலையில் அணையில் 7 மற்றும் 11-வது ஷட்டர்கள் பலவீனமாக இருப்பதாகவும், 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தினால் இடுக்கி மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கேரள அரசு புகார் அளித்திருந்தது. இது குறித்து நேற்று மூவர் குழு ஆய்வு செய்வற்கு முன்பே தமிழக அரசு பிரதிநிதியான பொதுப்பணித்துறை செயலர் சாய்குமார் தலைமையில் அதிகாரிகள் 7, 11-வது ஷட்டர்களை ஆய்வு செய்தனர். நேற்று மதியம் மூவர் குழு அணைப்பகுதியில் ஆய்வு நடத்தியது. அப்போது கேரள அரசு சந்தேகம் எழுப்பிய ஷட்டர்கள் குறித்து குழுவின் தலைவர் எல்.ஏ.வி.நாதன் கேட்டார். பலமாக இருப்பதாகவும், தேவையற்ற, பொய் குற்றச்சாட்டுகளை கேரளம் தெரிவிப்பதாகவும் குழு தலைவரிடம் தனது அதிருப்தியை சாய்குமார் தெரிவித்தார்.

பின்னர் எல்.ஏ.வி.நாதன் முன்னிலையில் மீண்டும் ஷட்டர்கள் ஏற்றி, இறக்கி சோதிக்கப்பட்டதில் பலமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதை கேரள அதிகாரிகளிடம் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து 13 ஷட்டர்களையும் ஏற்றி இறக்க வேண்டும் என கேரள அரசு பிரதிநிதியான குரியன் தலைமையிலான அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். மின்வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஜெனரேட்டர் உதவியுடன் அனைத்து ஷட்டர்களையும் ஒரே நேரத்தில் ஏற்றிஇறக்க இயலாது என தமிழக அதிகாரிகள் தெரிவித்ததை நாதன் ஏற்றுக்கொண்டு, கேரள அதிகாரிகளின் கோரிக்கையை நிராகரித்தார். ஆய்வின்போது செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் குமுளியில் மூவர் குழுவினர் தமிழக, கேரள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கேரள குழு மீது நடவடிக்கை

137 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து தமிழக அதிகாரிகள் பலர் அணைக்கு வந்த னர். இவர்கள் பற்றிய முழு விவ ரம், செய்தியாளர்கள் குறித்த முழு விவரங்களையும் உளவுத்துறை யில் சேகரித்தனர். துணைக்குழு வில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் அணை நீர்மட்டம் உயர்ந்துவிட்டதால் உடையும் ஆபத்து இருப்பதாக தன்னிச்சையாக பல்வேறு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது இடுக்கி மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலர் சாய்குமார் கூறும்போது, துணைக்குழு தவறான தகவல் பரப்பினால், அவர்களை குழுவிலிருந்து நீக்குவது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘பெரியாறு அணை யின் மின் உற்பத்தியை அதிகரிக் கவே நீர்திறப்பு 456 கன அடியிலிருந்து 1,756 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x