கோவை: வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்தால் வெடித்துச் சிதறிய 22 சிலிண்டர்கள்

குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.

குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.

Updated on
1 min read

கோவை: கோவையில் கட்டுமானப் பணியில் ஈடுபடும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் இன்று (ஆக.29) ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து 22 சிலிண்டர்கள் வெடித்து சிதறின.

கோவை நவ-இந்தியா பகுதியில் பிஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி, கட்டுமானத் தொழிலில் பணியாற்றி வருகின்றனர். இங்கு இவர்கள் தங்க வசதியாக 75 தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கொட்டகையில் குறைந்தபட்சம் 5 பேர் வீதம் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகின்றனர்.

மேலும், இந்த தொழிலாளர்கள் சமையல் செய்து சாப்பிடுவதற்கு வசதியாக ஒரு கொட்டகைக்கு ஒரு கேஸ் சிலிண்டர் இருந்ததாக தெரிகிறது. இதில், சமையல் கேஸ் சிலிண்டர், வணிக கேஸ் சிலிண்டர், 5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களும் அடங்கும்.

இந்நிலையில், இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றிருந்தனர். ஒருசில தொழிலாளர்கள் மட்டும் அந்த கொட்டகையில் தங்கியிருந்ததாக தெரிகிறது. அப்போது நண்பகலில் சிலர் சமையல் செய்துள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ பரவ தொடங்கியதால், அங்கிருந்த அனைவரும் அச்சமடைந்து வெளியே ஓடி வந்தனர்.

பின்னர், இதுகுறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் 3 தீயணைப்பு ஊர்திகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

மேலும், தீ கொளுந்து விட்டு எரிந்ததால் வெப்பம் தாங்காமல் அங்கிருந்த கேஸ் சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதற தொடங்கியது.

கூடுதலாக பீளமேடு, கோவை வடக்கு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஊர்திகள் வரவழைக்கப்பட்டன. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தில் கொட்டகைகளில் இருந்த 22 சிலிண்டர்கள் வெடித்து சிதறி சேதமடைந்தன. மேலும், வெடிக்காத நிலையில் இருந்த 30 சிலிண்டர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து பீளமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

<div class="paragraphs"><p>குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.</p></div>
Gemini Omni: கூகுளின் மல்டிமாடல் ஏஐ வீடியோ ஜெனரேட்டரின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in