Gemini Omni: கூகுளின் மல்டிமாடல் ஏஐ வீடியோ ஜெனரேட்டரின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Gemini Omni: கூகுளின் மல்டிமாடல் ஏஐ வீடியோ ஜெனரேட்டரின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

சென்னை: இன்று சமூக வலைதளத்தில் நாம் பார்க்கின்ற வீடியோக்களில் சில ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்படுகின்றன. இந்தச் சூழலில் கூகுள் நிறுவனம் Gemini Omni என்ற ஏஐ வீடியோ ஜெனரேட்டரை கடந்த மே மாதம் அறிமுகம் செய்தது.

இதன் மூலம் மிக எளிதாக பயனர்கள் ஏஐ வீடியோவை ஜெனரேட் செய்ய முடியும் என டெக் வல்லுநர்களும், பயனர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர். இதன் அம்சங்கள் மற்றும் பயன்பாடு குறித்து விரிவாக பார்ப்போம்.

Gemini Omni

எந்தவொரு இன்புட்டையம் கூகுள் Gemini Omni-யில் பயனர்கள் கொடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டெக்ஸ்ட், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஃபுட்டேஜ் உள்ளிட்டவற்றை பயனர்கள் இன்புட்டாக கொடுக்க முடிகிறது என்கிறார் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது அனைத்தையும் ஒரு Prompt-ல் தர முடியும் என்பதுதான் இதன் ஹைலைட். அதுவே மற்ற வீடியோ ஏஐ ஜெனரேட்டர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.

இதை Gemini செயலி, கூகுள் புளோ, யூடியூப் ஷார்ட்ஸ் ரீமிக்ஸ், யூடியூப் கிரியேட் உள்ளிட்டவற்றில் இதை பயன்படுத்த முடியும். இதில் பயனர்கள் இன்புட் கொடுத்தால் அதற்கு தகுந்த வீடியோக்களை ஜெனரேட் செய்து Gemini Omni வழங்கும். அதில் திருப்தி இல்லையென்றால் தொடர்ந்து அதோடு உரையாடல் மேற்கொண்டு பயனர்கள் தங்களுக்கு வேண்டிய மாற்றங்களை மேற்கொள்ளலாம். சரியாக வரும் வரை வேண்டிய மாற்றங்களை இதில் மேற்கொள்ள முடியும்.

கவனிக்க வைக்கும் அம்சங்கள்

>> வெறும் டெக்ஸ்ட், ஏதேனும் ஒரு படம், ஏதேனும் ஒரு ஆடியோ அல்லது வீடியோ அல்லது இதன் அனைத்தையும் சேர்த்து இதில் வீடியோ ஜெனரேட் செய்ய முடியும். பயனர்கள் விவரிக்கும் காட்சியை கச்சிதமாக புரிந்து கொள்ளும் திறன் இந்த வீடியோ மாடலுக்கு உள்ளதாக கூகுள் கூறுகிறது.

>> இதில் பயனர்கள் அவதாரை உருவாக்கும் அம்சமும் உள்ளது. அதை அடுத்தடுத்த வீடியோக்களில் பயன்படுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் வாட்டர் மார்க்கிங் அம்சம் இதில் உள்ளது.

>> ஷார்ட் பார்மெட் வீடியோ மேக்கிங், புரோமோஷனல் வீடியோ, கல்வி சார்ந்த வீடியோக்களை இதில் உருவாக்க முடியும்.

>> இதை யூடியூப் ஷார்ட்ஸ் ரீமிக்ஸ் மற்றும் யூடியூப் கிரியேட்டில் கட்டணமின்றி பயன்படுத்த முடியும். Gemini செயலி மற்றும் கூகுள் புளோவில் கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம்.

>> இதில் 360 பிக்சல் முதல் 4கே ரெசல்யூஷன் வரையில் வீடியோ ஜெனரேட் செய்ய முடியும்.

>> முதற்கட்டமாக Gemini Omni பிளாஷ் வெளியானது. அதில் 10 விநாடிகள் மட்டுமே வீடியோவை ஜெனரேட் செய்ய முடிந்தது. இப்போது 40 விநாடிகள் வரை இதில் வீடியோ ஜெனரேட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gemini Omni: கூகுளின் மல்டிமாடல் ஏஐ வீடியோ ஜெனரேட்டரின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
தங்கம் விலை அதிரடி சரிவு: பவுனுக்கு ரூ.2,360 குறைவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in