Published : 14 Jul 2016 08:52 AM
Last Updated : 14 Jul 2016 08:52 AM

ஆங்கில மொழி வளர்ச்சியில் ஷேக்ஸ்பியரின் பங்களிப்புக்கு முக்கிய இடம் உண்டு: நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் ரோசய்யா புகழாரம்

ஆங்கில இலக்கியத்துறையில் மட்டு மின்றி ஆங்கில மொழி வளர்ச்சியிலும் ஷேக்ஸ்பியரின் பங்களிப்புக்கு முக்கிய இடம் உண்டு என்று ஆளுநர் ரோசய்யா கூறினார்.

ஆங்கில இலக்கிய மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்பு களை மையப்படுத்தி திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத்துறை முன்னாள் தலை வரான பேராசிரியர் கே.செல்லப்பன் “தி வேல்டு அஸ் ஏ ஸ்டேஜ்: ஷேக்ஸ் பீரியன் டிரான்ஸ்பார்மேஷன்ஸ்” என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலை லயோலா கல்லூரி ஆங்கில இலக்கியத்துறை சார்பில் நடந்த “ஷேக்ஸ்பியர் லிவ்ஸ்-2016” நிகழ்ச்சியில் நேற்று வெளியிடப் பட்டது. தமிழக ஆளுநர் ரோசய்யா நூலை வெளியிட, லயோலா கல்லூரி அதிபர் ஜெயபதி பிரான்சிஸ் பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் துணைவேந்தர் பி.கே.பொன்னுசாமி எமரால்டு பதிப்பக உரிமையாளர் கோ.ஒளிவண்ணன் ஆகியோரும் பிரதிகளை பெற்றனர். விழாவில் ஆளுநர் ரோசய்யா பேசியதாவது:

கவிஞர், நாவலாசிரியர், நடிகர் என பல்வேறு பன்முகங்களைக் கொண்ட ஷேக்ஸ்பியர், 17-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். 300 ஆண்டு களைக் கடந்தும் அவரது படைப்புகள் இன்றும் பேசப்படு கின்றன. நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன. அவரது காவியங்கள் வாழ்க்கையில் பல்வேறு சூழல்களை தத்ரூபமாக வெளிப் படுத்துபவை. அவரது படைப்புகள் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவரது நாடகங்களை நேரில் பார்க்கும்போது மட்டுமே அவரது படைப்புகளின் மகத் துவத்தை உணர முடியும். எனவே, ஷேக்ஸ்பியரின் நாடகங்களை பள்ளி, கல்லூரிகளில் அரங்கேற்ற இந்திய ஆங்கில ஆசிரியர்கள் சங்கம் உதவ வேண்டும். நூலாசிரியர் கே.செல்லப்பன் தனது 80 வயதில் “தி வேல்டு அஸ் ஏ ஸ்டேஜ்: ஷேக்ஸ் பீரியன் டிரான்ஸ்பார்மேஷன்ஸ்” என்ற நூலை எழுதியுள்ளார். எழுத்து மீதான அவரது தாகத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இளம் எழுத் தாளர்களுக்கு அவர் சிறந்த ஊக்கமாக இருப்பார். அவரைப் பெரிதும் பாராட்டுகிறேன். இவ்வாறு ஆளுநர் ரோசய்யா கூறினார்.

லயோலா கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர், அதிபர் ஜெயபதி பிரான்சிஸ், துணை முதல்வர் பாத்திமா வசந்த் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்திய ஆங்கில ஆசிரி யர்கள் சங்க சென்னை கிளை தலைவர் கே.எஸ்.அந்தோணிசாமி வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். நூலாசிரியர் கே.செல்லப்பன் ஏற்புரையாற்றினார். பேராசிரியர்கள் ஜோசப் சந்திரா நன்றி கூறினார். லாசர் செல்வா தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x