Published : 14 Dec 2014 08:50 AM
Last Updated : 14 Dec 2014 08:50 AM

சென்ட்ரல் - விமான நிலையம் இடையே 2016 ஜனவரியில் மெட்ரோ ரயில் சேவை: ஷெனாய் நகர் திருமங்கலம் சுரங்கப் பணி நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் பணிக் காக முதல்கட்டமாக திருமங்கலத்தில் இருந்து ஷெனாய் நகர் வரை சுரங்கப் பாதை தோண்டும் பணி நேற்று முடிந்தது. சென்ட்ரல் விமான நிலையம் தடத்தில் மெட்ரோ ரயில் 2016 ஜனவரியில் இயக்கப்படவுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பணி 2007 ம் ஆண்டு தொடங்கியது. அப்போது ரூ.14,600 கோடி திட்டமதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இதன் செலவு ரூ.20 ஆயிரம் கோடி யாக அதிகரித்துள்ளது. 2 வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதில், 24 கி.மீ. தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்கப் பாதை யிலும், 21 கி.மீ. தூரத்துக்கு (13 ரயில் நிலையங்கள்) உயர்மட்ட ரயில் பாதையிலும் ரயில்கள் இயக்கப்படும்.

முதல்கட்டமாக ஷெனாய்நகர் - திருமங்கலம் இடையே சுரங்கம் தோண்டும் பணி நேற்று காலை 11.30 மணிக்கு நிறைவடைந்தது. தரைமட்டத்தில் இருந்து 50 அடி ஆழத்தில் 6 மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்டிய ராட்சத இயந் திரம், திருமங்கலம் ரயில் நிலையத்தில் பூமியை துளைத் துக் கொண்டு வந்து, சுரங்கம் தோண்டும் பணியை நிறைவு செய்தது. அதிகாரிகள், ஊழியர்கள் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் ராமநாதன் நிருபர்களிடம் கூறிய தாவது:

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே உயர்மட்ட ரயில் பாதை அமைக்கும் பணி முழுமை அடைந்துள்ளது. இதில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி முதல் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ரயிலை 95 கி.மீ. வேகம் வரை இயக்கி வெற்றி கரமாக சோதனை ஓட்டம் நடத்தப் பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து சிறப்புக் குழுவினர் வந்து ஒரு வாரத்துக்கு ஆய்வு நடத்து வார்கள். இத்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து வரும் மார்ச்சில் தொடங்கப்படும்.

இனி, ரயில் பாதைகள் போடும் பணி தொடங்கப்படும். பின்னர், திருமங்கலத்தில் இருந்து சாய்வு தளம் அமைக்கப்பட்டு, கோயம்பேடு மேம்பால ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும்.

சென்ட்ரல் - விமான நிலையம் தடத்தில் மெட்ரோ ரயில் 2016 ஜனவரி முதல் இயக்கப்படும். வண்ணாரப்பேட்டை சென்ட்ரல் - விமான நிலையம் தடம் உட்பட அனைத்து தடங்களிலும் பணிகள் முடிந்து 2017-ம் ஆண்டு முதல் இயக்கப்படும் என்றார்.

சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக ஷெனாய்நகர் - திருமங்கலம் இடையே சுரங்கம் தோண்டும் பணி நேற்று காலை நிறைவடைந்தது. திருமங்கலம் ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பெரிய இயந்திரம் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வந்தது. அப்போது அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். 2. தண்டவாளம் பதிப்பதற்கு தயார் நிலையில் சுரங்க வழிப் பாதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x