Published : 21 Feb 2017 09:15 AM
Last Updated : 21 Feb 2017 09:15 AM

ராகுல் காந்தியிடம் கேட்காமல் எந்த முடிவும் எடுப்பதில்லை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் கேட்காமல் நான் எந்த முடிவையும் எடுப்பதில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கு மாறு நான் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதனை சில தலைவர்கள் முறியடித்ததாகவும் திட்டமிட்டு செய்திகள் பரப்பப் படுகின்றன. அது முற்றிலும் தவறானது.

அதிமுகவுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் யாரையும் ஆதரிக்க வேண்டாம் என காங் கிரஸ் மேலிடம் முடிவு எடுத்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது என்ன செய்வது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

அதன்படி நம்பிக்கை வாக் கெடுப்பு தேதி அறிவிக்கப்பட்டதும் ராகுல் காந்தியிடம் தெரிவித்தேன். அவர் சோனியா காந்தியுடன் ஆலோசித்து தமிழகப் பொறுப் பாளர் முகுல் வாஸ்னிக் மூலம் கடந்த 17-ம் தேதி இரவு 10.30 மணிக்கு தகவல் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பது என்ற காங்கிரஸின் முடிவை உடனடியாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தேன். 18-ம் தேதி காலை சத்தியமூர்த்தி பவனுக்கு எம்எல்ஏக்களை வர வழைத்து மேலிடத்தின் முடிவை அறிவித்தேன். இதுதான் நடந்தது.

ஆனால், யாருக்கு ஆதரவு அளிப் பது என்பதில் காங்கிரஸ் தலைவர் களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், அதிமுக வுக்கு ஆதரவாக நான் செயல் பட்டது போலவும் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

நான் ராகுல் காந்தி மற்றும் மேலிடத் தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவை யும் எடுப்பதில்லை; எடுக்கவும் மாட்டேன். என்னை காயப்படுத்தி மகிழ்ச்சி அடைய வேண்டும் என விரும்புபவர்கள் இனியும் அது போன்ற செயல்களில் ஈடுபட வேண் டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்னைப் பற்றி தெரிவிக்கும் கருத்துகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் யாரைப் பற்றி யும் யாரிடமும் புகார் கூறியதில்லை. எனவே, இளங்கோவன் பற்றி மேலி டத்தில் புகார் செய்ய மாட்டேன்.

1977-ல் இருந்து 45 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 6 முறை எம்எல்ஏ, 3 முறை எம்பி, மத்திய, மாநில அமைச்சர், சட்டப்பேரவை துணைத் தலைவர், காங்கிரஸில் தேசிய செயலாளர் என அனைத்து பதவிகளையும் வகித்துவிட்டேன். யாரை எப்படி எதிர்கொள்வது, எப்படி அரசியல் செய்வது என்பது எனக்கும் தெரியும்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காவலர் களால் தாக்கப்பட்டது கடும் கண் டனத்துக்குரியது. தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக எம்எல்ஏக்கள் சிலர் பேரவைத் தலைவரின் இருக்கையில் அமர்ந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற காங்கிரஸ், திமுக வின் கோரிக்கையை நிராகரித்து விட்டு, எதிர்க்கட்சிகளே இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் பட்டுள்ளது. இது சரியான முடிவு அல்ல. இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

பேட்டியின்போது எச்.வசந்த குமார் எம்எல்ஏ, மாநில எஸ்.சி. பிரி வுத் தலைவர் கு.செல்வப்பெருந் தகை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x