Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM

காஞ்சிபுரம் சுற்றுலாத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி வண்டலூர், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காணும் பொங்கலையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் கடற்கரை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், முக்கிய கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடுவர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இம்மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜய குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: “பொங்கலை யொட்டி வண்டலூர் பகுதியில் 150 போலீஸாரும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 20 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாமல்லபுரம் கடற்கரையில் 200

காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மாமல்லபுரம், கோவலம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் காவல்துறை மீட்புப் படகுகளுடன் மீனவ சமுதாயத் தைச் சேர்ந்த 150 நீ்ச்சல் வீரர்கள் மீட்கும் பணியை மேற்கொள்வார்கள்” என்றார் அவர்.

கடலில் குளிக்கத் தடை

மால்லபுரம் கடற்கரையில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக, அப்பகுதியில் குளிக்க தடை விதிக்குமாறு மாமல்லபுரம் பேரூராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். அதன் பேரில், 700 மீட்டர் நீளத்திற்கு கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலில் குளிக்கத் தடை என்ற எச்சரிக்கை பலகைகளும் பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளன. கட்டுமரங்களில் சுற்றுலாப் பயணிகளை கடலுக்குள் அழைத்துச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x