Last Updated : 01 Jan, 2016 08:23 AM

 

Published : 01 Jan 2016 08:23 AM
Last Updated : 01 Jan 2016 08:23 AM

திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும்: சோனியாவிடம் வலியுறுத்திய இளங்கோவன்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக நேரடி யாகவும், மறைமுகமாகவும் அரசியல் கட்சிகளின் தலை வர்கள் பேச்சு நடத்தி வருகின்ற னர். பாஜக தலைவர்கள், தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளனர். அக்கட்சி யின் தேசிய, மாநில நிர்வாகிகள், விஜயகாந்துடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். பாமக இளைஞ ரணித் தலைவர் அன்புமணி ராம தாஸையும் சந்தித்து பேசினர்.

அதே நேரத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், திருமாவளவன் ஆகியோரும் விஜயகாந்தை சந்தித்து தங்களது கூட் டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். விஜயகாந்த் குடும்பத்தினருடன் திமுகவினர் ரகசிய பேச்சு நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், தங்கள் கூட்டணிக்கு வருமாறு விஜய காந்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பகிரங்க அழைப்பு விடுத்தார்.

கடந்த 28-ம் தேதி செய்தி யாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ‘கூட்டணி என வரும்போது காங்கிரஸை விட்டுவிட மாட்டோம். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கும் இடம் உண்டு’ என தெரிவித் திருந்தார்.

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று முன்தினம் இளங்கோவன் சந்தித்துப் பேசினார்.

இது குறித்து ‘தி இந்து’ விடம் பேசிய காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஒருவர், ‘‘கடந்த 2013-ல் கூட் டணியை முறித்துக் கொண்ட பிறகு முதல்முறையாக காங் கிரஸுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்தும் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்தும் சோனியாவிடம் இளங்கோவன் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு போன்ற பல காரணங் களால் அதிமுக அரசுக்கு எதிரான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். ப.சிதம்பரம், தங்கபாலு என மூத்த தலைவர்கள் கட்சிக்கு கட்டுப்படாமல் தனியாக செயல் படுவது குறித்து தெரிவித்த இளங்கோவன், அனைவரும் ஒற்றுமையாக நின்றால் திமுக விடம் அதிக தொகுதிகளைப் பெறலாம் என தெரிவித்துள்ளர். இதனால் தமிழக காங்கிர ஸில் நம்பிக்கை கீற்று வெளிப் பட்டுள்ளது’’ என்றார்.

நல்ல முடிவு

இது தொடர்பாக இளங்கோவ னிடம் கேட்டபோது, ‘‘திருவனந்த புரத்தில் சோனியா காந்தியை சந்தித்து சட்டப்பேரவைத் தேர் தல் தொடர்பாக பல விஷயங் களை விவாதித்தோம். தேர்தல் கூட்டணி குறித்து சோனியாவும், ராகுலும் உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுப்பார்கள். எங்களைப் பொறுத்தவரை சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சியை தயார்படுத்தி வரு கிறோம்’’ என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x