Published : 24 Apr 2017 07:51 AM
Last Updated : 24 Apr 2017 07:51 AM

ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து பயணிகளிடம் 25 பவுன் நகை கொள்ளை: ஜோலார்பேட்டை அருகே மர்ம நபர்கள் கைவரிசை

ஜோலார்பேட்டை அருகே அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி பெண் பயணி ஒருவரிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியையும், அயர்ந்து உறங் கிக்கொண்டு இருந்த மற்ற பெண் பயணிகளிடம் இருந்து 18 பவுன் தங்கச் சங்கிலிகளையும் பறித்துச் சென்றனர். இவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது : பெங்களூருவில் இருந்து சென்னை வரை செல்லும் பெங்களூரு மெயில், நேற்று அதிகாலை ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர் ரயில் நிலையம் நோக்கி வந்துகொண்டு இருந்தது. அப்போது எஸ் 3 பெட்டியில் பயணம் செய்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார்.

அப்போது, வெளியே இருந்து அடையாளம் தெரியாத 6 பேர் ரயிலுக்குள் ஓடி வந்தனர். உடனே, ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த சென்னை, பெரியார் நகரைச் சேர்ந்த பட்டாபிராமன் என்பவரின் மனைவி காமாட்சியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து 7 பவுன் தாலிச் சரடை பறித்துச் சென்றனர். அதேபோல் பெங்களூரைச் சேர்ந்த சரஸ்வதி, மீனாட்சி, சென்னை சேலையூரைச் சேர்ந்த பிருந்தா, பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேஷகுமாரி, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த சயிஷா ஆகியோரிடம் சுமார் 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்த நபரும் கீழே இறங்கி தப்பியோடினார். இதைத் தொடர்ந்து, ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. நகைகளை பறிகொடுத்த 6 பெண்களும் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீ ஸார் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆனி விஜயா, ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர் குமரேசன் மற்றும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்தில் நேற்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, ரயில் பயணிகளி டம் நகை பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் குமரேசன் தலைமையில் 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர் குமரே சன் செய்தியாளர்களிடம் கூறும் போது; ‘‘கடந்த 2015-ம் ஆண்டு பச்சூர் ரயில் நிலையம் அருகே பெங்களூரு விரைவு ரயிலில் கொள்ளைச் சம்பவம் நடைபெற் றது. இது தொடர்பாக, வடமாநில இளைஞர்கள் 7 பேர் கைது செய்யப் பட்டு, கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த சம்பவத்திலும் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம்’’ என்றார்.

3 ஆண்டுகளில் 7 கொள்ளை

ஜோலார்பேட்டை ரயில் நிலை யம் அருகேயுள்ள சோமநாயக் கன்பட்டி, பச்சூர், கேதாண்டப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில், 7 ரயில் கொள்ளைச் சம்பவங்கள் நடந் துள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி சோமநாயக் கன்பட்டி சிக்னல் அருகே, அடை யாளம் தெரியாத நபர்கள் ஆயு தங்களுடன் சுற்றித்திரிவதாக வந்த தகவலையடுத்து ரயில்வே போலீஸார் அங்கு சென்றபோது, 10 பேர் கொண்ட வட மாநிலத் தவர் போலீஸாரைக் கண்டு தப்பியோடினர்.

அவர்களை விரட்டி பிடித்த தில் 7 பேர் சிக்கினர். இவர்கள் சென்னை, காட்பாடி, ஜோலார் பேட்டை, பெங்களூரு போன்ற ரயில் நிலையங்களில் ஓடும் ரயில்களில் பயணிகளிடம் தங்க நகைகளைக் கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், இந்த மாதம் 3-ம் தேதி தருமபுரி மாவட்டம், மொரப் பூர் - ஜோலார்பேட்டை ரயில் பாதை உள்ள ஆர். எஸ். தொட் டம்பட்டி அருகேயுள்ள பொன் னாகவுண்டம்பட்டி ரயில் நிலை யத்தில் மர்ம நபர்கள் ரயில்வே சிக்னலை உடைத்துள்ளனர்.

பின்னர், அந்த வழியாக வந்த கேரளா விரைவு ரயிலில் புகுந்து எஸ்.3 பெட்டியில் இருந்து எஸ்.8 பெட்டி வரை கத்தியைக் காட்டி மிரட்டி, 4 பெண் பயணிகளிடம் இருந்து 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

கடந்த ஆண்டு பெங்களூரு வில் இருந்து சென்னை சென்ற பெங்களூரு மெயில், ஜோலார் பேட்டை அடுத்த சோமநாயக்கன் பட்டி - பச்சூர் ரயில் நிலையம் இடையே சென்றபோது, நள்ளிர வில் எஸ்4 பெட்டியில் அடையா ளம் தெரியாத நபர், மூன்று பெண் களிடம் கத்தியைக் காட்டி நகை கள், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றார். இதுவரை குற்றவாளிகள் யாரும் அடையாளம் காணப்பட வில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x