Last Updated : 05 Feb, 2017 10:11 AM

 

Published : 05 Feb 2017 10:11 AM
Last Updated : 05 Feb 2017 10:11 AM

ஐடி நிறுவனங்களில் உள்ள உணவகங்களில் வெளிநாட்டு உணவு பொருட்களை விநியோகிக்க வேண்டாம்: உரிமையாளர்களுக்கு ஊழியர்கள் கடிதம்

ஐ.டி நிறுவன உணவகங்களில் வெளிநாட்டு குளிர்பானம் மற்றும் உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலை, தரமணி, சோழிங்கநல்லூர், தாம்பரம், டைடல் பார்க், காரப்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐ.டி நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன. இங்குள்ள நிறுவனங் களில் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும் பாலானோர் தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு உணவு வகைகள், குளிர்பானங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பாரம்பரிய தமிழக உணவுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ஜல்லிக்கட்டு போராட்டக் களத் தில் இவர்கள் தீவிரமாக பேசியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது ஐ.டி ஊழியர்கள் தங்களது நிறுவன உரிமை யாளர்களுக்கு இது தொடர்பாக விரிவான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில், “ஐ.டி நிறுவனங் களில் உள்ள உணவகங்களில் கோக், பெப்சி, மாசா, பீட்சா, பர்கர் உள்ளிட்ட உணவு பண்டங்களை விநியோகம் செய்ய வேண்டாம். மாறாக இயற்கை உணவுகள், குளிர்பானத்தை விநியோகம் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஐ.டி ஊழியரான ராதிகா என்பவர் கூறும்போது, “ஐ.டி நிறுவன உணவகங்களில் வெளிநாட்டு உணவு பண்டங்களை விற்பனை செய்ய வேண்டாம் என கடிதம் எழுதி அனுப்பி யுள்ளோம். இதை மீறி விற்பனை செய்தால் அவற்றை வாங்காமல் புறக்கணிப்போம். தற்போது இயற்கைக்கு மாறாக, துரிதமாக தயாரிக்கப்படும் உணவு, குளிர்பான வகைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண் கள்தான். எனவே, இவைகளை புறக்கணிக்க முடிவு செய்துள் ளோம்.

இயற்கைக்கு மாறான உணவு, அதைத் தொடர்ந்து தொற்று, அதை தடுக்க தடுப்பு மருந்து என தனது வணிகத்தை பெருக்க வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வருகின்றன. இதற்கு நாம் உடன்படக்கூடாது. எனவே, வெளிநாட்டு உணவு பண்டங்களை புறக்கணித்து தமிழக உணவான இளநீர், நுங்கு, கூழ், பழவகைகளை ஐ.டி நிறுவன உணவகங்களில் விநியோகம் செய்ய வலியுறுத்தி யுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x