பொறியியல் டிப்ளமோ தேர்வுகளை பழைய மாணவர்கள் எழுத வாய்ப்பு: தொழில்நுட்ப கல்வித் துறை அறிவிப்பு

பொறியியல் டிப்ளமோ தேர்வுகளை பழைய மாணவர்கள் எழுத வாய்ப்பு: தொழில்நுட்ப கல்வித் துறை அறிவிப்பு
Updated on
1 min read

தொழில்நுட்ப கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொழில்நுட்ப கல்வித்துறை நடத்தவிருக்கும் 2016 அக்டோபர் மற்றும் 2017 ஏப்ரல் பொறியியல் டிப்ளமோ தேர்வுகளை ஓஆர், என்ஆர், ஆர்ஆர், ஆர்எஸ், சி, டி, ஜி, ஜெ மற்றும் கே பாடத்திட்டங்களில் முன்னாள் பழைய மாணவர்களுக்கும் கருணை அடிப்படையில் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வு கட்டணமாக ரூ.500, மதிப்பெண் கட்டணமாக ரூ.30, பதிவு கட்டணமாக ரூ.25-ம் தாங்கள் படித்த கல்லூரி முதல்வர் மூலமாக செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். அபராதம் ரூ.100 செலுத்தி பதிவுசெய்ய கடைசி நாள் அக்டோபர் 7-ம் தேதி ஆகும். தட்கல் முறையில் ரூ.500 செலுத்தி அக்டோபர் 14-ம் தேதி வரை பதிவுசெய்ய லாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in