Published : 30 Aug 2016 08:49 AM
Last Updated : 30 Aug 2016 08:49 AM

லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்: சென்னை பெசன்ட் நகர் மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - கடும் போக்குவரத்து நெருக்கடி

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலய பெரு விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண் டதால் பெசன்ட்நகர் மற்றும் அங்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத் தலத்தின் 44-வது ஆண்டு பெரு விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் கிறிஸ்தவர் கள் மட்டுமல்லாமல் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் பங் கேற்பார்கள். இதற்காக சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர் கள் குவிந்தனர். பாதயாத்திரையாக பலர் வந்தனர். நேற்று மதியம் முதலே பெசன்ட் நகரில் குழுமத் தொடங்கியதால் பெருவிழா கோகலமாக களைகட்டத் தொடங்கியது.

பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கொடிமரத்தை நோக்கி ஏராளமான பக்தர்கள் முண்டியடித்து முன்னேறினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், வேளாங்கண்ணி அன்னை உருவம் பொரித்த கொடியை, ஆலய வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் ஏற்றி, திருவிழாவைத் தொடங்கி வைத் தார். அதனைத் தொடர்ந்து, அவரது தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கான கிறிஸ்தவர்கள், பாதிரியார் கள், கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாதா மன் றாட்டு ஆராதனை, நற்கருணை ஆசீர்வாதம் நிகழ்ச்சிகள் நடந்தன.

கொடியேற்றத்தை முன்னிட்டு பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொடி யேற்ற நிகழ்ச்சி முடிந்ததும் பாத யாத்திரையாக வந்த ஏராளமான பக்தர்கள் ஊர் திரும்பினர். வரும் செப்டம்பர் 7-ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி பங்கேற்கிறார். 8-ம் தேதி முடிசூட்டு திருவிழாவுடன் பெருவிழா நிறைவடைகிறது.

கடும் நெரிசல்

வழக்கத்துக்கு மாறாக அதிக பக்தர்கள் குவிந்ததால் நேற்று மதியத்தில் இருந்தே பட்டினப்பாக் கம், அடையாறு, திருவான்மியூர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. மேலும் மேலும் பக் தர்களின் கூட்டம் அலைமோதிய தால் மாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெருக் கடி ஏற்பட்டது. இரவு 9 மணிக்குப் பிறகே நெரிசல் சீரானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x