Published : 07 May 2017 09:48 AM
Last Updated : 07 May 2017 09:48 AM

பிஹார், குஜராத் மாநிலங்களைப் போல பூரண மதுவிலக்கு தமிழகத்தில் எப்போது? - அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

பிஹார், குஜராத் போல தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப் போது வரும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னையை அடுத்த திரு முல்லைவாயல் பகுதியில் புதி தாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கைதான பிரசன்னா என்பவரின் தாயார் இறந்ததால் அவரை உடனடியாக பரோலில் விட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு கிடைக்கவில்லை எனக்கூறி அவரை விடுவிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்தனர்.

மறுநாள் காலையில் இதுகுறித்து நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், காலை 11.30 மணிக்குள் அந்த வாலிபரை விடுவிக்காவிட்டால் உள்துறைச் செயலாளரும், சிறைத்துறை உயரதிகாரியும் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்துக் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அந்த வாலிபர் விடு விக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேர் மீதான எப்ஐஆரையும் நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் நடந்தது. அரசு குற்றவியல் தலைமை வழக் கறிஞர் ராஜரத்தினம் ஆஜராகி சிறைத்துறை அதிகாரிகள் சார்பில் மனுவை தாக்கல் செய்தார். அப் போது புழல் சிறை கண்காணிப் பாளர் முருகேசன் உள்ளிட்ட சிறைத் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தியுள்ள தாகக் கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

அதையடுத்து நீதிபதிகள், எதிர் காலத்தில் சிறைத்துறை அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என அவர்களுக்கு அரசு அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவித் தனர். மேலும், “டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு என அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? டாஸ்மாக் மதுக்கடைகளை அடுத்து எப்படி மூடப்போகிறீர்கள்? 500 கடைகளாகவா? அல்லது 1000 கடைகளாகவா?” என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப் பினர்.

தொடர்ந்து நீதிபதிகள், ‘‘தமிழகத் தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தா லும் பூரண மது விலக்கை அமல் படுத்த முடியவில்லை. பிஹார், குஜ ராத் போல தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத் தப்படும்?’’ என அரசுக்கு கேள்வி எழுப்பினர். பின்னர், உயர் நீதி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் தமிழக சிறைத்துறையில் தொலைத்தொடர்பு சாதனங்களை மேம்படுத்துவது தொடர்பாக வும் அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x