Last Updated : 07 Jan, 2017 01:15 PM

 

Published : 07 Jan 2017 01:15 PM
Last Updated : 07 Jan 2017 01:15 PM

மதுரை பொறியாளர் உருவாக்கிய ஆன்லைன் விசிட்டிங் கார்டு

தனி நபர், வர்த்தக நிறுவனம் பற்றிய விவரங்கள் அறியவும், ஆவணங்களை சேமித்து வைக் கவும் உதவும் இலவச ‘ஆன்லைன் விசிட்டிங் கார்டு’வசதியை மதுரையை சேர்ந்த பொறியாளர் எஸ். மணிகண்டன் உருவாக்கியுள்ளார்.

இது குறித்து பொறியாளர் எஸ்.மணிகண்டன் கூறியதாவது: தனிநபர், நிறுவனம் குறித்து தேவைப்படும் தகவல் களை பெற ‘இ-கனெக்ட் ஆப்’பை உருவாக்கினேன். இதில், நாம் அறிந்துகொள்ள விரும்பும் நபர் அல்லது நிறுவனத்தின் தகவ ல்களை தெரிந்துகொ ள்ளலாம். மேலும், ‘இமேஜ்’ ஸ்டோரில் இன்சூரன்ஸ், பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் தகவ ல்களை சேமித்துவைத்து தேவைப்படும்போது ஸ்மார்ட் போன் மூலம் எடுத்து பார்த்துக்கொள்ளலாம். ‘பின்லாக்’ முறையில் பதிவு செய்யப்படும் ஆவணங்களை பாஸ்வேர்ட் மூலம் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்த்துக்கொள்ள முடியும்.

‘இமேஜ்’ ஸ்டோரில் பப்ளிக் வியூவ், பின்லாக் வியூவ் வசதி உள்ளது. இவற்றில் நாம் விரும்பும் புகைப்படத்தை மட்டும் பகிர்ந்துகொள்ளலாம். பிற ஆவணங்களை ரகசியமாக பாதுகாத்துக்கொள்ளலாம்.

‘ஆன்லைன் நோட்புக்’ என்ற வசதியால் வங்கிக் கணக்கு எண்கள், பிறந்த நாள் குறிப்புகளை பதிந்து, தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளளாம். ஆன்ட் ராய்டு செல்போனில் ‘கூகுள் பிளே’ ஸ்டோரில் இருந்தும், www.econnectweb.com இணையதள முகவரியில் இருந்தும்‘இ-கனெக்ட் இந்தியா’ ஆப்பை பதி விறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x