Published : 15 Apr 2017 07:51 AM
Last Updated : 15 Apr 2017 07:51 AM

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு விபத்து வழக்கு ஆவணங்களை ‘ஆன்-லைன்’ மூலம் வழங்க உத்தரவு

போலியாக இழப்பீடு கோரப்ப டுவதைத் தவிர்க்க விபத்து வழக்குகளின் ஆவணங்களை காப்பீடு நிறுவனங்களுக்கு வழங்குவது போல அரசு போக் குவரத்துக்கழகங்கள் மற்றும் மோட்டார் வாகன தீர்ப்பாயங் களுக்கும் ஆன்லைன் மூலமாக வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் போலி ஆவணங் களின் மூலம் விபத்து இழப்பீடு கோரப்படுவதாகவும், இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது, ‘‘இந்தியா முழுவதும் காவல் நிலையங்களில் பதிவா கும் குற்றவியல் வழக்குகள், குற்றம்புரிந்தோர், பாதிக்கப்பட் டோர், விபத்து வழக்குகள், அந்த வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த அனைத்து விவரங் களையும் சிசிடிஎன்எஸ் எனப்படும் இணைய தளம் மூலமாக பதி வேற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக வழக்குகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்த வழக்கு விவரங்களை பதிவிறக்கம் செய்ய இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.100 கட்டணத்தில் அனுமதி யளிக்கப்படுகிறது’’ என்ற தகவல் நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு விபத்து வழக்குகளின் விவரங் களை ஆன்-லைனில் வழங்குவது போல, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத் துக்கழகங்கள், மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுக்கள், மாநிலம் முழுவதும் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் 300 தீர்ப்பாயங்கள் போன்ற வற்றுக்கும் ஆன்லைனில் விபத்து வழக்குகளின் விவரங்களை வழங்க வேண்டும்’’ என உத்தர விட்டு விசாரணையை வரும் ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளிவைத் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x