Published : 26 Mar 2014 10:08 AM
Last Updated : 26 Mar 2014 10:08 AM

புழல் சிறையில் பயங்கரம்: கைதிகள் - போலீஸார் மோதல்: 14 பேர் படுகாயம், 4 கைதிகள் இடமாற்றம்

புழல் சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்த கைதிகளும், காவல் துறையினரும் மோதிக் கொண்டதில் 11 கைதிகளும், 3 காவலர்களும் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து 4 கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை புழல் சிறையில் 800-க்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 200 பேர் திங்கள்கிழமை காலையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

தங்கள் மீதான வழக்குகளை விரைவில் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி திரிபாதி, டிஐஜி மவுரியா மற்றும் அதிகாரிகள் சிறைக்கு சென்று கைதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் கைதி கள் கோபமாகவும், ஆபாசமாகவும் பேசினர். அதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த கைதி களை கலைந்து போகச்சொல்லி சிறைக் காவலர்கள் விரட்டினர்.

அப்போது கைதிகள் கற்களை எடுத்து தாக்குதல் நடத்தினர். போலீஸார் கைதிகள் மீது தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தால் 11 கைதிகள் காயம் அடைந்தனர். இளவரசன் என்ற காவலர் உட்பட 3 காவலர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிறைக்குள் இருக்கும் மருத்துவமனையிலேயே சிகிச்சை.

மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து சாதிக் பாட்ஷா, ஆறுமுக நயினார், பார்வதி சங்கர், சிவா ஆகிய கைதிகள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x