Published : 12 Sep 2016 10:48 AM
Last Updated : 12 Sep 2016 10:48 AM

அடையாறு ஆற்றை தூர்வாரக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் காஞ்சி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் இம்மாவட்டங்கள் வழியாக ஓடும் அடையாறு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கூடுவாஞ்சேரி, தாம்பரம், திருநீர்மலை, அனகாபுத்தூர், சைதாப்பேட்டை வழியாகச் செல்லும் அடையாறு ஆற்றில் கனமழையின்போது கரைபுரண்ட வெள்ளநீர் கரையோரப்பகுதி குடியிருப்புகளில் புகுந்தது.

எனவே, அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி தூர்வாரக்கோரி முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக சுமார் 1500 பேர் கையெழுத்திட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் கடந்த ஜூன் மாதம் மனு அளித்தனர். 3 மாதங்களாகியும் எந்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.

இதனை கண்டித்தும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நேற்று முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதி இணை நடவடிக்கை குழு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதற்கு வரதராஜபுரம் நலமன்ற கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கி னார். ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தொடங்கி வைத்தார். பெண்கள் உட்படஏராளமானவர் கள் இதில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x