Published : 27 Apr 2014 03:43 PM
Last Updated : 27 Apr 2014 03:43 PM

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் அரிய வகை கோவேறு குதிரைகள்

ராமேஸ்வரத்திலிருந்து அரிய வகை கோவேறு குதிரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராமேஸ்வரம் தீவில் தனுஸ்கோடி முதல் பாம்பன் வரை அரிய வகை கோவேறு குதிரைகள் வாழ்ந்து வாழ்கின்றன. பாம்பன் ரோடு பாலம் 1988 ஆம் ஆண்டு திறக்கப்படுவதற்கு முன்னர், ராமேஸ்வரம் தீவு ரயில் சேவையால் மாத்திரமே இந்தியாவுடன் இணைந்திருந்தது. அதுவரை உள்ளுர் போக்குவரத்திற்கு குதிரை வண்டிகளை மாத்திரமே அதிகம் சார்ந்திருந்தனர்.

1988-க்கு முன்னர் ராமேஸ்வரத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்களை ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி, ராமர் பாதம், அக்னி தீர்த்தம் உள்ளிட்ட இடங்களுக்கு குதிரைகள் பூட்டிய (கோவேறு குதிரை) வண்டிகளையே பயன்படுத்தினர்.

ஆனால் 1988-க்கு பின்னர், பாம்பனில் ரோடு பாலம் திறக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து அதிகரித்து, இதனால் உள்ளுர் மக்களும், பயணிகளும் குதிரை வண்டி பயன்பாட்டினை தவிர்த்தனர்.

இதனால் வருமானமின்றி குதிரைகளுக்கு தீவனம்போட முடியாமல் தவித்த குதிரை உரிமையாளர்கள், தனுஷ்கோடி முதல் பாம்பன் கடலோர பகுதி வரை சவுக்கு மரக்காடு பகுதிகளில் குதிரைகளை விட்டனர். இப்போது இந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அரியவகை கோவேறு குதிரைகள் காடுகளில் வசித்து வருகின்றன.

இந்த கோவேறு குதிரைகளை ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதாக தற்போது தகவல்கள் வெளியாகிவுள்ளது. இதுகுறித்து மீனவ சங்கப் பிரநிதி கூறும்போது, "முன்பெல்லாம் ராமேஸ்வரத்திலிருந்து இந்த கோவேறு குதிரைகளை கள்ளதனமாக நீலகிரி, தேனி மாவட்ட விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்தார்கள்.

ஆனால், அதை விட இலங்கையில் கோவேறு குதிரைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் கடல் மார்க்கமாக கோவேறு குதிரை குட்டிகளை கடத்துகிறனர். இத்தகைய அரிய வகை கோவேறு குதிரையை பாதுகாக்கவும், கடத்தப்படுவதை தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x