Published : 14 Feb 2017 12:13 PM
Last Updated : 14 Feb 2017 12:13 PM

சசிகலா குற்றவாளி: கொண்டாட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில், ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உடனடியாக சரணடையுமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ் ராய் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

சொத்துகுவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, இளவரசி, என். சுதாகரன் ஆகியோர் குற்றாவாளிகள் என்று இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லம்:

இந்நிலையில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தில் ஆதர்வாளர்கள், "சசிகலா குற்றவாளி, தமிழ்நாடு காப்பற்றப்பட்டது" என்று முழக்கமிட்டுள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரது இல்லத்தில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அறிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா இல்லம்:

தீபா இல்லத்தில் கூடிய அவரது ஆதாவாளர்கள், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பை வரவேற்று பாடல், நடனம் ஆடி "தீபா அம்மா வாழ்க" என்று கோஷமிட்டு கொண்டாடி வருகின்றனர்.

கூவத்தூரில் தற்போதைய நிலை

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டதால், கூவத்தூர் சொகுசு விடுதியில், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கூவத்தூர் சொகுசு விடுதியில் தற்போதைய நிலைமை குறித்து அறிய ஊடங்களும் அங்கு விரைந்துள்ளன.

கூவத்தூரில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.

போயர்ஸ் கார்டன்:

போயஸ் கார்டனில் உள்ள சசிகலா ஆதரவாளர்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x