Published : 06 Nov 2014 08:23 AM
Last Updated : 06 Nov 2014 08:23 AM

ஜி.கே.வாசன் வெளியேறியதால் காங்கிரஸில் மீண்டும் எழுச்சி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து

தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேறியதால் காங்கிரஸ் எழுச்சி பெற்று வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கடலூரைச் சேர்ந்த சமூக சேவகர் மணிரத்தினம் மற்றும் அவரது ஆதரவாளர் சூரிய மூர்த்தி ஆகியோர் மாற்று கட்சி யில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் நேற்று சேர்ந்தனர். அவர்களை சென்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாழ்த்தி வரவேற் றார். நடிகர் கார்த்திக்கும் நேரில் வந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதர வாக இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் பேசியதாவது: காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் அதற்கே உரிய பாணியில் சில தவறுகளை செய் யும். அப்படி செய்த தவறில் மணி ரத்தினம் காங்கிரஸை விட்டு வெளி யேறினார். ஆனால் காங்கிரஸ் நாடு முழுவதும் முழு மையாக தோற்ற நிலையில் மீண்டும் காங்கிரஸில் இணைய வந்திருக்கிறார். அவரை பாராட்டு கிறேன்.

காங்கிரஸ் வெற்றிபெற்ற போதெல்லாம் உடன் இருந்து அனுபவித்துவிட்டு, தோற்று விட்டது என்று தெரிந்த நேரத்தில் சிலர் காங்கிரஸில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். சிறு சறுக்கல் ஏற்பட்டபோது நம்மை விட்டு ஓடியவர்கள் பதவிக்காகவே அரசிய லில் இருப்பவர்கள்.

என்னுடைய அருமை செல்லப் பிள்ளை நம்மை விட்டு போய் விட்டார் என்பது வருத்தம். அதே வேளையில், காங்கிரஸ் கட்சிக்கு புதியவர்கள் பலர் வந்து தமிழகத்தில் காங்கிரஸ் எழுச்சி பெற வழிகாட்டியிருக்கிறார். செல்லப்பிள்ளை வெளியேறாமல் இருந்திருந்தால் நாம் தூங்கிக் கொண்டுதான் இருப்போம்.

நடிகர் கார்த்திக் வருகையால் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் செல்வாக்கு பெறும். சிலர் வெளியே றினாலும், நல்லது செய்து விட்டு தான் சென்றிருக்கிறார்கள். கார்த்திக் எப்போதும் துணிச்சலாக பேசக் கூடியவர். கஷ்டமான காலத்தில் காங்கிரஸ் இருக்கும் போது எதையும் எதிர்பாராமல் இங்கு வந்தி ருக்கிறார். அவரை வரவேற்கிறேன். சிலர் நம்மை விட்டு போனது, பல பேருக்கு வழிவிடுகிறது போல இருக்கிறது என்றார்.

நடிகர் கார்த்திக் பேசியதாவது: காங்கிரஸூக்கு நான் புதியவன் இல்லை. நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சியுடன் இணைவதை விட பெருமை வேறு ஒன்றும் கிடை யாது. அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். காங்கிரஸூக்கு தோல்வி புதிதில்லை. பல சோதனைகளை சந்தித்து வெற்றி கண்ட இயக்க மிது. இப்போது ஏற்பட்டுள்ள சோதனை யில் வெற்றிபெறுவோம் என்றார்.

மணிரத்தினம் பேசியதாவது: கட்சியை தாண்டி நாங்கள் சமூக சேவகர்கள். காங்கிரஸூக்காக உழைக்க வந்திருக்கிறோம். கிராமம் கிராமமாக காங்கிரஸை வலுப் படுத்த வந்திருக்கிறோம். 618 கிராமங்களில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. 316 ஊராட்சி மன்றத் தலைவர்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து வைத்திருக் கிறேன். கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கட்சியை சிறப்பாக வைத்திருப்போம் என்றார்.

காங்கிரஸில் சேர்ந்தாரா கார்த்திக்?

நடிகர் கார்த்திக் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத் துக்கொள்ள வந்து கொண்டிருக்கிறார் என்று ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் தெரிவித்தார். கார்த்திக் வந்து, காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். 129 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க கட்சியில் இணை வதற்கு பெருமை கொள்கிறேன் என்றார். தனது கட்சியை காங்கிரசில் இணைத்து கொண்டதற்கு காரணம் என்ன என்று பத்திரிகையாளர்கள் கார்த்திக்கை கேட்டபோது, நான் அப்படி சொல்லவே இல்லை. இணைக்க இருக்கிறேன். அதை முறைப்படி தெரிவிப்பேன் என்றார்.

எதற்காக சத்தியமூர்த்தி பவன் வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, கட்சி கஷ்டத்தில் இருக்கிறது. நான் ஒற்றுமையாக இருப்பதை தெரிவிக்க வந்தேன் என்றார். எப்போது இணைவீர் கள்? என்று கேட்டதற்கு, ‘கடவுள் தீர்மானிப்பார்’ என்றார்.

கார்த்திக் இவ்வாறு கூறியது குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவ னிடம் கேட்டபோது, ‘‘கார்த்திக் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x