Published : 27 Jan 2017 07:08 PM
Last Updated : 27 Jan 2017 07:08 PM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 குறைவு

சென்னையில் வெள்ளிக்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.216 குறைந்து ரூ.22 ஆயிரத்து 120க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த 18-ம் தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.22,704க்கு விற்கப்பட்டது. உள்ளூரிலும் தங்கத்தின் தேவை 25 சதவீதம் குறைந்து வருவதால் தங்கம் விலை குறைந்து வருகிறது.

சென்னையில் வெள்ளிக்கிழமை 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.216 குறைந்து ரூ.22 ஆயிரத்து 120க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 765க்கு விற்பனை ஆனது. இதுவே, வியாழக்கிழமை ரூ.2 ஆயிரத்து 792க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x