Published : 23 Apr 2017 09:47 AM
Last Updated : 23 Apr 2017 09:47 AM

சிபிஎஸ்இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

மே 7-ல் நடக்கும் நீட் தேர்வுக் கான ஹால்டிக்கெட் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோயம் புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக் கான ஹால்டிக்கெட் (அனுமதி சீட்டு) இணையதளத்தில் (cbseneet.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் மாண வர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்த விலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதா, சட்டப்பேரவையில் பிப்ரவரி 1-ல் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. நாடு முழுவதும் பொதுவாக நடத்தப்படும் தேர்வுக்கு தமிழகத் துக்கு மட்டும் விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x