Published : 21 Mar 2017 08:59 AM
Last Updated : 21 Mar 2017 08:59 AM

நியூட்ரினோ திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்திவைப்பு: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு







தேனி மாவட்டத்தில் தொடங்கப் படவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தால் வழங்கப் பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்திவைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.சுந்தர் ராஜன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் 12-வது ஐந் தாண்டு திட்டத்தில் மிகப்பெரிய அறிவியல் சார்ந்த திட்டமான நியூட் ரினோ ஆய்வு மையம், தேனி மாவட் டம் பொட்டிபுரம் கிராமம் போடி மலைப் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2011-ல் வழங்கியுள்ளது.

இத்திட்டத்துக்காக அங்குள்ள மலையின் உட்பகுதியில் வெடி வைத்து 6 லட்சம் டன் பாறைகள் வெட்டி எடுக்கப்பட உள்ளன. பல்வேறு நதிகளின் பிறப்பிடமாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இவ்வாறு செய்தால், நீராதாரங்களில் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும். அருகில் உள்ள முல்லை பெரியாறு அணை, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தடுப்பணைகளுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பன போன்ற விவரங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் இடம்பெறவில்லை.

இத்திட்டம் தொடர்பாக சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு செய்த நிறு வனம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவ னம் இல்லை. அங்கு பல்வேறு விலங்கினங்கள் வாழ்ந்து வரும் நிலையில், மத்திய வன உயிரின துறையிடம் அனுமதி பெறவில்லை. இந்த அம்சங்கள் இல்லாமல் வழங் கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் அடிப் படையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங் கள் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளன. அதனால் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதி மணி, தொழில் நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘வன உயிரின துறையி டம் உரிய அனுமதி பெறாதது மற்றும் அங்கீகரிக்கப்படாத நிறு வனம் மூலம் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு செய்ததற்காக நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுகிறது. இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி, புதிதாக விண்ணப்பிக்கலாம். இந்த வழக்கு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது’’ என அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x