Published : 23 Feb 2017 10:06 AM
Last Updated : 23 Feb 2017 10:06 AM

சிங்காரவேலர் பெயரில் அறிவியல் பல்கலைக்கழகம்: தமிழக அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரில் அறிவியல் பல்கலைக் கழகம் உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை மற்றும் சிங்காரவேலர் சிந்தனைக்கழக அறக்கட்டளை சார்பில் சிங்கார வேலர் 9-ம் அறக்கட்டளை விழாவும், பா.வீரமணி எழுதியுள்ள “சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள்” நூல் வெளியிட்டு விழாவும் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள பவளவிழா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். முதல் பிரதியை தமிழ் இலக்கியத் துறையின் தலைவர் பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து “தந்தை பெரியாரும், சிங்காரவேலரும்” என்ற தலைப்பில் கி.வீரமணி, சிங்காரவேலர் 9-வது அறக்கட்டளை சொற்பொழி வாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஒடுக்கப்பட்ட மீனவ சமுதாயத்தில் பிறந்து தன்னுழைப்பால் உயர்ந்த மேதை ஆவார். சமூக வளர்ச்சி யில் அக்கறை கொண்ட அவர், அறிவு சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காதவர். மற்றவர்கள் சிந்திக்க முடியாத நிலைக்குச் சென்று சிந்தித்தவர் சிங்காரவேலர்.

சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், அண்ணா, பாரதி தாசன் போன்றோர் பெயரில் பல்கலைக்கழகங்கள் இருக்கின் றன. அந்த வரிசையில், சிங்கார வேலரின் பெயரில் அறிவியல் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

பெரியாரின் சிந்தனைகளைப் போல சிங்காரவேலரின் சிந்தனை களும் தனித்துவம் மிக்கவை. இருவரும் சமூக சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச்சொன்ன முன் னோடிகள். அவர்கள் பல ஆண்டு களுக்கு முன்பு சொன்ன கருத்துகள் இப்போதும் தேவைப்படுகின்றன. இருவரும் சமுதாய பற்றும், அறிவு பற்றும் கொண்டவர்கள். அறிவியல் சிந்தனைகளை எப்போதோ சொல்லிவிட்டனர். சமூக புரட்சிக்கு வித்திட்ட அவர்கள் இருவரும் ஒரே பாதையில் பயணித்தார்கள். அவர்களின் சிந்தனை கருத்துகள் பல்கலைக்கழகங்களில் மாணவர் களுக்குப் பாடத்திட்டமாக வைக்கப் பட வேண்டும்.

இவ்வாறு வீரமணி கூறினார்.

முன்னதாக, நடைபெற்ற சிங்காரவேலர் கவியரங்கில் கவிஞர் கள் தமிழமுதன், முருகையன், இரா.தெ.முத்து, நா.வே.அருள், கவியழகன் ஆகியோர் தாங்கள் எழுதிய கவிதைகளை வாசித்தனர். நிறைவாக, தமிழ் இலக்கியத்துறை பேராசிரியர் ஆ.ஏகாம்பரம் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x