Published : 16 Aug 2016 09:01 AM
Last Updated : 16 Aug 2016 09:01 AM

9 நாட்களாக தேடும் நவீன கப்பல்கள்: மாயமான விமானம் குறித்து உறுதியான தகவல் இல்லை - 24 சிக்னல்கள் கண்டுபிடிப்பு

மாயமான ராணுவ விமானத்தை தேடும் பணியில் 30 மிதக்கும் பொருட்கள், 24 சிக்னல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

சென்னை தாம்பரம் விமானப் படைத் தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் 29 பேருடன் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியில் போர்க் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் எதிலுமே நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து கடலின் மேற்பரப்பில் விமானத்தை தேடும் பணி கடந்த 2-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

விமானம் கடலுக்கு அடியில் ஆழமான பகுதிக்குள் கிடக்க லாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். எனவே, கடலின் ஆழத்தில் தேடும் திறன் படைத்த கப்பல்களை வைத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ‘நிருபக்’ என்ற கடற்படை கப்பலும், ஒரு நீர்மூழ்கி கப்பலும் கடலுக்கு அடியில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்த மான ‘சாகர்நிதி’, மத்திய புவியி யல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான ‘சமுத்திர ரத்னாகர்’ ஆகிய இரு ஆராய்ச்சிக் கப்பல் களும் மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளன. 4 கப்பல்களும் கடந்த 9 நாட்களாக தேடியும் இதுவரை விமானம் குறித்து நம்பகமான மற்றும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

24 சிக்னல்கள்

கப்பல்கள் நடத்திய தேடுத லில், 30 மிதக்கும் பொருட்கள் மற்றும் 24 சிக்னல்கள் கிடைத் துள்ளன. அவற்றை ஆய்வு செய்து பார்த்ததில் அவை அனைத்தும் மாயமான ஏ.என்.32 விமானத்துடன் தொடர்பு உடையவை இல்லை என்பது தெரியவந்துள்ளது. கப்பல்கள் தொடர்ந்து நடுக்கடலில் நிறுத் தப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x